வீட்டுக்கு வீடு சென்று பிரசாரம் செய்வோம்’- கேஜ்ரிவால்

0
380
Arvind Kejriwal warned people home house Delhi indiatamilnews

Arvind Kejriwal warned people home house Delhi indiatamilnews

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஅரசு முன்வராவிட்டால், அடுத்த வாரத்தில் இருந்து டெல்லியில் மக்களைத் தேடிச்சென்று வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்து, கையெழுத்து வாங்குவோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அரசும் குற்றம்சாட்டுகின்றன.

மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.

இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, கடந்த 5 நாட்களாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர்கள் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் தலையிட வேண்டும் எனக் கோரி மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கும் மத்திய அரசு சார்பில் எந்தவிதமான பதிலும் இல்லை. இந்நிலையில், துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்தவாறு அரவிந்த் கேஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்பும், டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தில் தலையிட்டு மத்திய அ ரசு முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், மக்களைத் தேடிச் செல்வோம், வீட்டுக்கு வீடு சென்று,மக்களிடம் பிரச்சாரம் செய்து, சூழலை எடுத்துக்கூறி, கையொப்பம் பெறுவோம். அதை நாம் பிரதமருக்கு அனுப்பிவைபோபம். என்னுடைய கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவிசாய்க்கவில்லை. டெல்லி மக்களின் கோரிக்கையை ஏற்பாரா எனப் பார்க்கலாம்.

ஆம் ஆத்மி அறிவித்த மக்களின் வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் கிடைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கடந்த 3 மாதங்களாகப் போராட்டம் நடத்திவரும் ஐஏஎஸ்அதிகாரிகளையும், துணை நிலை ஆளுநர் கேள்வி கேட்கவில்லை. பிரதமருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தும் அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசு டெல்லியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்துள்ளது. இது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பிடிக்கவில்லை. மத்தியப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளாகவும், குஜராத்தில் 30 ஆண்டுகளாகவும் பாஜக ஆள்கிறது ஆனால்,நாங்கள் செய்த திட்டங்களைப் போல் செய்யவில்லை. ஆதலால், எங்களின் நலத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த முயல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைக்குள் எங்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால், பிரதமர் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Arvind Kejriwal warned people home house Delhi indiatamilnews

More Tamil News

Tamil News Group websites :