சிரியா செல்ல முற்பட்டால் 9 வருட சிறை!

0
224
9 year sentence related attempting join Islamic group

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுடன் இணைய முற்பட்ட மூவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.9 year sentence related attempting join Islamic group

இந்த தீர்ப்பை Bas-Rhin (Grand Est) நகர குற்றவியல் நீதிமன்றம் வழங்கியுள்ளது. குறித்த மூவரும் இரண்டு தடவைகள் சிரியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். குறிப்பாக நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் இவர்கள் சிரியா செல்ல முற்பட்டுள்ளனர்.

இது தவிர, மூவரும் தீவிர இஸ்லாம் மத அடிப்படைவாதம் கொண்டவர்கள் எனவும், பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பயங்கரவாதம் தொடர்பாக பல்வேறு மதமாற்றும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மூவருக்குமான இந்த தீர்ப்பு திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை நடந்த நீதிமன்ற விவாதத்திற்கு பின்னரே அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு 5 வருட தண்டனையும், இரண்டாமவருக்கு 7 வருட சிறைத்தண்டனையும், மூன்றாம் நபருக்கு 9 வருட சிறைத்தண்டனையும் வழங்கி Bas-Rhin நகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**