ஞானசாரவுக்கு அந்த நோயா? : வைத்தியசாலையில் அனுமதிப்பு

0
657
gnanasara thero hospitalized

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(gnanasara thero hospitalized)

சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்திருந்த ஞானசாரவுக்கு, ஆறுமாத கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை வரலாற்றில் பௌத்த துறவியொருவர் இவ்வாறு சிறைப்படுத்தப்படுவது அரிதான விடயமாதலால் இது பன்னாட்டு ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த ஞானசார தேரர் நீரிழிவு மற்றும் பாதங்களில் தொழுநோயால் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆறு மாத காலத்தில் நிறைவடையும் வகையில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை என ஹோமாகம நீதிமன்றம் ஞானசாரவுக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

tags :- gnanasara thero hospitalized
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites