வாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்!!

0
1084
young people chased scrambled group police swords

யாழ்.மானிப்பாய்ப் பகுதியில் வாள்களுடன் பயணித்த இனம் தெரியாத சிலரை இளைஞர்கள் விரட்டியடித்துள்ளனர். இளைஞர்களுக்கு அஞ்சிய வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது.(young people chased scrambled group police swords)

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.ஆனைக்கோட்டை உயரப்புலம் வீதியூடாக ஒரு மோட்டார்ச் சைக்கிளில பயணித்த மூவரடங்கிய குழு வீதியில் நின்ற பலருக்கும் வாள்களைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர். இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் வாள்வெட்டுக் குழுவினரை வேகமாக விரட்டிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொக்குவில் வராகி அம்மன் கோயிலடியில் நின்றிருந்த பொலிஸாரைக் கண்டதும் வாள்வெட்டுக் குழுவினர் தாங்கள் கொண்டு வந்த வாள்களை அப்பகுதியில் வீசிவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து வாள்வெட்டுக் குழுவினரை விரட்டியடித்த மானிப்பாய்ப் பகுதி இளைஞர்கள் இந்தவிடயம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய்ப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- young people chased scrambled group police swords

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites