இன்றைய ராசி பலன் 14-06-2018

0
722
Today Horoscope 14-06-2018

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 31ம் தேதி, ரம்ஜான் 29ம் தேதி,
14.6.18 வியாழக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி இரவு 11:56 வரை;
அதன் பின் துவிதியை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 3:53 வரை;
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம்:

நண்பரை தவறாக கருதும் சூழல் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. இஷ்ட தெய்வ வழிபாடு மனக்கவலை மாற்ற உதவும்.

ரிஷபம்:

இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் அதிகரிக்கும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். குடும்பத்தினர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்:

சேவை மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். நினைத்த செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பணவரவு அதிகரிக்கும். பழைய நண்பரை சந்திக்க வாய்ப்பு உண்டாகும்.

கடகம்:

முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரம சூழ்நிலையை உடனே சரி செய்யவும். மிதமான பணவரவு இருக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும்.

சிம்மம்:

பேச்சில் நிதானம் அவசியம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். தவிர்க்க இயலாத வகையில் திடீர் செலவு ஏற்படலாம். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி:

அதிக நேர்த்தியுடன் செயல்படுவீர்கள். அரசு உதவி பெற அனுகூலம் உண்டு. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். ஆதாயம் உயரும். பெண்கள் குடும்பத்தினருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.

துலாம்:

பேச்சில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபார நடைமுறை சிறக்க விடாமுயற்சி, கடின உழைப்பு தேவை. சுமாரான வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர்.

விருச்சிகம்:

வளர்ச்சிக்கான புதி்ய வாய்ப்பு தேடி வரும். நீண்டநாள் கவலை நீங்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும்.

தனுசு:

முக்கிய செயல்களில் தாமதம் வேண்டாம். தொழில் வியாபார இடையூறுகளை உடனே சரி செய்யவும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். பெண்கள் பிறருடைய பணம், நகையை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.

மகரம்:

உழைப்பிற்கு ஏற்ப ஆதாயம் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். குடும்பத்தினரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்:

மனதில் நல்லெண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து மேலோங்கும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மீனம்:

மனதில் குழப்பம் உண்டாகி மறையும். கூடுதல் வேலை பளு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. மூலதனத்திற்கான பணத்தேவை அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.

மேலும் பல சோதிட தகவல்கள்