மஹிந்த குடும்பத்திற்கு எதிரான விசேட உயர் நீதிமன்றம் ஜூலையில் விசாரணைகளை ஆரம்பிக்கும்

0
1184
daily drink person torture family member different judgment

(tamilnews Special High Court start hearing cases July 4)

இலங்கையின் முதலாவது நிரந்தர மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றம், உயர் மட்ட நிதிமோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான தனது விசாரணைகளை எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி தனது விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீதான பணச் சலவை, நிதி ரீதியான குற்றங்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக இந்த நீதிமன்றில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் விசேட நீதிமன்றம் தொடர்பான சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகம், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நம்பர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் தொடர்பாக விசேட உயர் நீதிமன்றங்கள் அமைக்க வழிவகுக்கும் வகையில் அரசாங்கத்தால் குறித்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.

முதல் விசேட உயர் நீதிமன்றம் ஜூலையிலும் ஏனைய இரண்டு நீதிமன்றங்களும் செப்டெம்பர் மாதமளவில் கொண்டு வரப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

(tamilnews Special High Court start hearing cases July 4)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites