உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை!!!

0
214
shikhar dhawan hundred vs Afghanistan news Tamil

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சிக்கர் தவான் சதம் விளாசி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் உணவு இடைவேளைக்கு முன் சதமடித்த முதல் இந்தியராக சிக்கர் தவான் இன்று பதிவாகியுள்ளார்.

உணவு இடைவேளைக்காக இந்திய அணி பெவிலியன் திரும்பியுள்ள நிலையில், விக்கட்டிழப்பின்றி 158 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்திய அணிசார்பில் சிக்கர் தவான் 91 பந்துகளுக்கு 104 ஓட்டங்களை விளாசி, இந்திய கிரிக்கெட்டில் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

இந்திய அணியின் சார்பில் உணவு இடைவேளைக்கு முன்னர் சதமடித்த முதல் வீரராக சிக்கர் தவான் பதிவாகியுள்ளதுடன், சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் 6வது வீரராகவும் இவர் இடம்பிடித்துள்ளார்.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வொர்னர் இடைவேளைக்கு முன்னர், 100 ஓட்டங்கள், முஜிட் கான் 108 ஓட்டங்கள், மெக்கார்த்தி 112 ஓட்டங்கள், பிரெட்மேன் 105 ஓட்டங்கள், ட்ரம்பர் 103 ஓட்டங்களளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

shikhar dhawan hundred vs Afghanistan news Tamil, shikhar dhawan hundred vs Afghanistan news Tamil