நிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா?

0
208
nudee person threatened people Hotel Le Bristol

பரிஸிலுள்ள Hôtel Le Bristol இல் வைத்து நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்படும் போது நிர்வாணமாக நின்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.( nudee person threatened people Hotel Le Bristol)

Hôtel Le Bristol இல் நீண்ட நாள் தங்கியிருந்த ஒருவர் முழு நிர்வாண கோலத்துடன் நிர்வாகியின் அறைக்கதவை தட்டியுள்ளார். உடனே கதவை திறந்த நிர்வாகிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அத்துடன் முழு நிர்வாணமாக நின்ற குறித்த நபர், கையில் கூரான கத்தி ஒன்றை வைத்து தன்னைத்தானே பல இடங்களில் கிழித்தும் உள்ளார்.

உடனடியாக Hôtel Le Bristol இன் நிர்வாகி காவல்துறையினரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு சென்ற காவல்துறையினர், குறித்த நபரை உடனடியாக கைது செய்தனர். அதன் பின்னர் குறித்த நபர் தங்கியிருந்த அறையினை முற்றிலும் சோதனையிட்டுள்ளனர். அங்கு ஒரு பொதி நிறைய மா போன்ற ஒரு பொருளை கண்டெடுத்ததாகவும், அவை பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கைது செய்யப்பட்ட நபர் தனியே ஆங்கிலம் மட்டுமே பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் குறித்த நபர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் முன்னர் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள Cochin மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

tags:-  nudee person threatened people Hotel Le Bristol

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**