காதர் மஸ்தானின் அமைச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :வர்த்தமானியில் அறிவிப்பு

0
959
MP Kader Mastan ministry post gazette

புதிதாக வழங்கப்பட்ட அமைச்சுகளுக்கான வர்த்தமானி அறிவிப்பில் காதர் மஸ்தானினது பிரதியமைச்சு பொறுப்பில் மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வளிப்பு ஆகியன மாத்திரமே உள்ளடங்கும் என அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.(MP Kader Mastan ministry post gazette)

கடந்த செவ்வாய்க்கிழமை காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சர் பொறுப்பில் இந்து அலுவல்கள் விடயதானமும் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினர்களால் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இன்றைய தினமும் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இதற்கிடையில் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் இன்று ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாண்டோவுடன் பேச்சுவார்தை நடத்தியிருந்தார்.

இந்தநிலையில், அமைச்சர் டி.எம் சுவாமிநாதனின் கூற்றின்படி, காதர் மஸ்தானின் பிரதியமைச்சு பொறுப்பில் இருந்து இந்து மத அலுவல்கள் விடயதானம் நீக்கப்பட்டுள்ளமை உறுதியாகிறது.

tags :- MP Kader Mastan ministry post gazette

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites