அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த

0
970
mahinda rajapaksa usa

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதையோ, அவர் ஜனாதிபதியாவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.(mahinda rajapaksa usa)

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது பற்றி, அதுல் கெசாப்புடனான சந்திப்பின் போது, எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது. இலங்கையை விட்டு வெளியேறும் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இடம்பெற்றது” என்றும் கூறியுள்ளார்.

tags :- mahinda rajapaksa usa

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites