முன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது?

0
1016
jayantha-wickrama

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(jayantha-wickrama)

இந்தப் படுகொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டால், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவார் என்று, கூறப்பட்டுள்ளது.

அரச சட்டத்தரணி ஜனக பண்டார நேற்று முன்தினம் கல்கிசை நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

“அந்த நேரத்தில் அவருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாததால், ஜயந்த விக்கிரமரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும், ஜயந்த விக்கிரமரத்னவுக்கு எதிராக போதுமான ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் திரட்டினால், அவரது கைது தவிர்க்க முடியாததாக இருக்கும்” என்றும் அரசதரப்பு சட்டத்தரணி ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

tags :- jayantha-wickrama

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites