ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி

0
1163
Homagama Magistrate sevtenced Gnanasara thero six months

பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரரை ஆறு மாதகாலம் கடூழிய சிறையில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவை பிறப்பித்துள்ளது.(Homagama Magistrate sevtenced Gnanasara thero six months)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்காகவே பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவருக்கு 1500 ரூபா அபராதமும் 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கவும் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிக்குகள் அடங்கிய குழுவொன்று நீதிமன்ற வளாகத்தில் காத்திருப்பதால் நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

tags:- Homagama Magistrate sevtenced Gnanasara thero six months

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites