வலி. வடக்கில் பொதுமக்களின் வீடுகள் புல்டோசரால் இராணுவத்தினர் இடித்தழிப்பு

0
117
destruction vali north civilian homes army

வலி. வடக்கில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் மதில்களை இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஒரு வார காலமாக இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (destruction vali north civilian homes army)

கட்டுவன் மயிலிட்டி வீதியின் கிழக்குப் பகுதியில் இராணுவத்தின் ஆக்கிரப்பில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளிலுள்ள வீடுகளையே புல்டோசர் பயன்படுத்தி இடித்தழிக்கும் நடவடிக்கைகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது.

பற்றைகள் வெட்டி அகற்றப்பட்டு, வீடுகள் இடித்தழிக்கப்பட்டு, வெட்டவெளியான நிலத்தில், தென்னம்பிள்ளை நடும் நடவடிக்கைகளையும், இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இராணுவத்தின் இந்த நடவடிக்கையினால் கட்டுவன் மயிலிட்டி விதியின் கிழக்குப் பகுதிகளிலுள்ள தமது காணிகள் இனியொருபோதும் விடுவிக்கப்படமாட்டாது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த 28 ஆவது ஆண்டு நிறைவு நாள் நாளை வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைகள் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

tags :- destruction vali north civilian homes army

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites