ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

0
35
Sri Reddy complaint Nani send Lawyer notice,Sri Reddy complaint Nani send Lawyer,Sri Reddy complaint Nani send,Sri Reddy complaint Nani,Sri Reddy complaint

பட வாய்ப்பு தர நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று சொல்லி இந்திய பட உலகையே அதிர வைத்தவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இந்நிலையில் இவர் இப்போது நடிகர் நானியை பாலியல் சர்ச்சைக்குள் இழுத்து பரபரப்பான புகார்கள் கூறி வருகிறார்.(Sri Reddy complaint Nani send Lawyer notice)

”நான் ஈ” படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நானி. “வெப்பம்”, ”ஆஹா கல்யாணம்” ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இந்நிலையில், நானி ஒரு நடிகையின் வாழ்க்கையை கெடுத்து நரகத்தில் தள்ளிவிட்டார். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிக்க கூடியவர் என்று ஏற்கனவே ஸ்ரீரெட்டி சாடி இருந்தார்.

மேலும், தெலுங்கில் நானி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் டி.வி நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டியை கலந்து கொள்ள விடாமல் தடுத்ததாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமான ஸ்ரீரெட்டி மீண்டும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார்.

“நானி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடந்து கொண்டார். என்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்ய நானி தயாரா? எனக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறார். எனது பாவம் அவரை சும்மா விடாது.” என்று பரபரப்பாக ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.

இதற்காக ஸ்ரீரெட்டிக்கு நானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது.. :-

“என் மீது ஸ்ரீரெட்டி அவதூறுகள் பரப்பி வருகிறார். அதில் உண்மை இல்லை. இத்தகையை செயல்கள் வருத்தம் அளிக்கின்றன. எனது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்புவதை அவர் நிறுத்த வேண்டும். இதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். ஒரு வாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.” இவ்வாறு நானி கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டி-நானி மோதல் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

பிரபல இசையமைப்பாளர் மீதான கோபத்தில் ஒல்லி நடிகரின் ரசிகர்கள்..!

பெட்ரூம் வரை சென்று புகைப்படம் எடுத்து இணையத்தில் உலவவிடும் இலியானா பாய்பிரண்ட்..!

நான்கு நாட்களில் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 2 : புரோமோ வீடியோக்களினால் பெரும் எதிர்பார்ப்பு..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் நோக்கம் இது தான் : கார்த்தி பேச்சு..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Sri Reddy complaint Nani send Lawyer notice

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 13-06-2018