ஸ்கொட்லாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது பாகிஸ்தான்!!!

0
169
Pakistan vs Scotland T20 2018 news Tamil

ஸ்கொட்லாந்துக்கு எதிரான ஒரு போட்டிக்கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 48 ஓட்டங்களால் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

முதலிரண்டு விக்கட்டுகளும் 46 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும், அணித் தலைவர் என்ற பொறுப்புடன் ஆடிய சப்ராஷ் ஓட்டங்களை வேகமாக குவித்தார்.

மூன்று சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களை சப்ராஷ் அஹமட் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, அடுத்து களமிறங்கிய சொயிப் மலிக் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 27 பந்துகளுக்கு 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி 20 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களை பெற்றது.

ஸ்கொட்லாந்து அணியின் எவன்ஸ் மாத்திரம் சிறப்பாக பந்து வீசி, 23 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து மிக சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. முன்சே 25 ஓட்டங்களையும், கோட்ஷேர் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க 5.1 ஓவர்களில் 53 ஓட்டங்கள் பெறப்பட்டது.

எனினும் அடுத்துவந்த வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் அணி்க்காக போராடிய பட்ஜ் 24 ஓட்டங்களையும், லீஸ்க் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தாலும், ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்து வீச்சில் சதாப் கான் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், ஹசன் அலி 33 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஷ் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.

<<Tamil News Group websites>>

Pakistan vs Scotland T20 2018 news Tamil, Pakistan vs Scotland T20 2018 news Tamil