ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பணிப்போர்! : வீரர்களுக்கு கட்டுப்பாடு விதித்தது பாகிஸ்தான்!!!

0
196
Pakistan cricket board restrict players play UAE T20

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கை தவிற, ஏனைய லீக் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தை பெற்றுள்ள வீரர்களுக்கே இந்த கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

லாஹுரில் நடைபெற்ற கவர்னிங் கவுண்சிலின் கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் சபையால் அறிமுகப்படுத்தப்படவுள்ள, புதிய இருபதுக்கு-20 தொடரின் காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி, கிரிக்கெட் சபை பிரதிநிதிகள் மற்றும் பாக். சுப்பர் லீக்கின் அணிகள் என்பன தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி, பாக். சுப்பர் லீக்கிற்கு முன்னர் 35 நாட்களை தரவேண்டும் என ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.

எனினும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அடுத்த சீசனில், டி10 லீக், அவர்கள் ஏற்பாடு செய்துள்ள புதிய இருபதுக்கு-20 தொடர் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் என்பன நடைபெறவுள்ளது.

இவைகளுக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடர்கள் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும் இதற்கு பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால், வேறு தொடர்களை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் சபையின் பொருளாதாரத்தில் சிக்கல் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏனைய தொடர்களை மலேசியாவில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

<<Tamil News Group websites>>

Pakistan cricket board restrict players play UAE T20, Pakistan cricket board restrict players play UAE T20