சர்வதேச நீதிமன்றில், கட்டார் தொடுத்துள்ள வழக்கு!!

0
378
International Court Justice case Qatar

மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது கட்டார் ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. (International Court Justice case Qatar)

தீவிரவாதத்திற்கு அதரவளிப்பதாக குற்றம்சாட்டி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து கட்டாருடனான இராஜதந்திர, வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளை துண்டித்தன. இந்த குற்றச்சாட்டை கட்டார் மறுத்து வருகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த செயற்பாட்டால் கட்டார் மக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் மனித உரிமைகள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக கட்டார் சர்வதேச நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை நிராகரிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய வெளிவிவகார அமைச்சர் அன்வர் கார்காஷ் இது கட்டாரின் மற்றொரு பொய் என்று தெரிவித்துள்ளார்.

கட்டாரியர்களை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வெளியேற்றியது, அந்த நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது, கட்டாரில் இருக்கும் ஐக்கிய அரபு இராச்சிய பிரஜைகளை வெளியேற உத்தரவிட்டது என அந்த நாடு கட்டார் மக்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக கட்டார் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

tags :- International Court Justice case Qatar

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**