சிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது!!

0
1107
government continuously deceiving minority people using curry pace

சிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். (government continuously deceiving minority people using curry pace)

நேற்றைய பிரதி ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அவரிடம் வினவிய போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்…

பல்வேறுபட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வழங்கி ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களை சகல விடயங்களிலும் ஏமாற்றி விட்டதாகவே தோன்றுகின்றது.

நேற்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மை உறுப்பினர்கள் எவருக்கும் பிரதி அமைச்சு ஒன்றை பெற்றுக்கொடுக்கவில்லை.

குறிப்பாக மத்திய நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிற்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஐக்கிய தேசிய கட் சியில் இருக்கும் பின்வரிசை உறுப்பினர்களில் மூத்த உறுப்பினராகிய அவர் முன்னதாக பிரதி அமைச்சராகவும் இருந்த அனுபவம் உள்ளவர்.

கட்சி கூறுவது போல அனுபவம் பாராளுமன்றத்தில் அவர்கள் மேற்கொள்ளும் முன்னெடுப்புகளுக்கு அமையவே இந்த பிரதி அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுவதானால் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிற்கு  ஒரு பொறுப்பு வழங்கபட்டிருக்க வேண்டும்.

மேலும் நாட்டில் இனவாதத்தை கட்டுப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறிய போதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுவரை ஆக்கபூர்வமாக எதுவும் செய்ததை காணவில்லை.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற அலுத்கமை கலவரம் தொடர்பிலோ அல்லது இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற கிந்தோட்டை , திகன கலவரங்கள் வரை முறையான நம்பிக்கையூட்டும் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அதே நேரம் நம்பிக்கையூட்டும் வகையில் நீதி விசாரணைகளும் நடைபெறவில்லை.

இது தவிர முஸ்லிம்களின் கல்வி, அபிவிருத்தி, தொழில் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ச்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வரும் கொழும்பு மாவட்டத்தை பார்த்தால் இது உங்களுக்கு தெளிவாகும் அவர்களின் வாழ்க்கைத்தரம் இருந்த இடத்திலேயே உள்ளது இது கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கம் வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை விடுத்துள்ள போதும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களுக்கு தொழில் வாய்ப்பு, வீட்டு வசதிகள் ஆ கியவற்றை பெற்றுக் கொடுக்க ஆக்க பூர்வமாக எதுவும் செய்யவில்லை என்றே கூறவேண்டும் என அவர் குறிப்பிடடார்.

tags:- government continuously deceiving minority people using curry pace

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites