குக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்!

0
276
10 crore kidnapped Kuwait, india tamil news, india news, india amil seidhi, kuwait,

{ 10 crore kidnapped Kuwait }

கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நோட்டுகளை துபாய்க்கு குக்கரில் கடத்திச் செல்ல முயன்ற நபர் இன்று காலை பிடிபட்டுள்ளார்.

இதுகுறித்து சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாவது:

புதுடெல்லியிலிருந்து விமானத்தில் கொச்சி வழியாக துபாய் செல்ல முயன்ற நபர் தன்னுடன் ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தையும் கொண்டு செல்ல முயன்றது தடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முயன்றவர் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர். இன்று (புதன்கிழமை) அதிகாலையில் துபாய்க்கு விமானத்தில் பறக்க முயன்றபோது அவரது பைகள் சோதனையிடப்பட்டன. அப்போது சவுதி அரேபியாவின் ரியால்களும் அமெரிக்க டாலர்களையும், பிரஸர் குக்கர் மற்றும் ஸ்டவ் பாத்திரங்களில் அவர் மறைத்து வைத்திருந்தது பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

பயணி மறைத்து வைத்திருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அந்த வெளிநாட்டுப் பயணியும் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் எப்படி இவ்வளவு வெளிநாட்டுப் பணம் வந்தது. அதை எதற்காக துபாய் எடுததுச் செல்கிறார் போன்ற விவரங்களை அறிய அவரிடம் சுங்க அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Tags: 10 crore kidnapped Kuwait

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்!

*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்!!

*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி

*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்!

*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்! – கணவர் கண்ணீர்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com