என்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு

0
1344
Namakal Farmer Compliant Rescuing Wife Nithyananda ashram Latest

நித்தியானந்தா வலையில் மாட்டி பல பெண்கள் மற்றும்  நடிகைகளும் சீரழிந்துள்ளனர் .இந்நிலையில் நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இருக்கும் தனது மனைவியை மீட்டு தருமாறு நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி எனும் விவசாயி ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்துள்ளார்.(Namakal Farmer Compliant Rescuing Wife Nithyananda ashram Latest )

அந்த மனுவில், 8 மாதங்களுக்கு முன் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆஸ்ரமத்திற்குச் சென்ற தன் மனைவி இன்று வரை வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மனைவியின் பெயரில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் உடனே தன் மனைவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.

நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் பல பெண்கள் உள்ளனர். அதில் தான் மனைவி உள்ளார் அவரை மீட்டு தருமாறு மனு அளித்துள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Namakal Farmer Compliant Rescuing Wife Nithyananda ashram Latest