சென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன? : கூறுகிறார் டோனி

0
141
MS Dhoni reveals batting strategy Chennai Super Kings

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைர் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இம்முறை ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது.

இரண்டு வருட தடைக்கு பின்னர் ஐ.பி.எல். தொடருக்கு திரும்பிய சென்னை அணியின் தலைமை பொறுப்பை ஏற்ற டோனி தலைமைத்துவத்திலும் சரி, துடுப்பாட்டத்திலும் சரி சிறந்த முறையில் செயற்பட்டார்.

அதிலும் இம்முறை அவரது துடுப்பாட்டத்திலும், வேகத்திலும் அதிக மாற்றங்கள் இருந்தது. வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடும் போது, டோனியின் அதிரடி ஆட்டம் சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தது.

15 போட்டிகளில் 455 ஓட்டங்களை விளாசிய டோனியின் ஓட்ட சராசரி 75.83 ஆக உயர்ந்திருந்தது. காரணம் டோனி 15 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் ஆட்டமிழக்கவில்லை.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஸ்டார் ரெல்மெஜின் விருது விழாவில் கலந்துக்கொண்டு, தனது துடுப்பட்ட யுத்திகள் தொடர்பில் டோனி கருத்து வெளியிட்டள்ளார்.

அவர் குறிப்பிடுகையில்,

“என்னால் ஆட்டத்தை நிறைவுசெய்ய வேண்டும் என்ற தேவையிருந்தால், அதற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்வேன். நான் பின்வரிசை துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் போது, நீண்ட நேரங்களை எடுத்துக்கொள்ள முடியாது. உடனடியாக ஓட்டங்களை பெறவேண்டும். அதனால் அதிரடியை வெளிப்படுத்துவேன்.

அணி எந்த நிலையில் இருக்கின்றது அதற்கேற்ற துடுப்பாட்ட வீரர் யார் என்பதை தெரிவுசெய்வது அவசியம். நான் துடுப்பாட்ட வரிசையை பெரிதாக அவதானிப்பதில்லை. அதாவது 1,2, 3 அல்லது 4 என நான் துடுப்பாட்ட வரிசையினை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. இன்னும் எத்தனை ஓவர்கள் இருக்கிறது என்பதை பார்த்துவிட்டே களமிறங்குவேன்.

இப்படி களமிறங்கும் போது, குறித்த ஓவர்களுக்கு ஏற்றவாறு ஓட்ட வேகங்களை அதிகரிக்க முடியும். வெற்றியை எட்டுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

<<Tamil News Group websites>>

MS Dhoni reveals batting strategy Chennai Super Kings, MS Dhoni reveals batting strategy Chennai Super Kings