முஹமது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை கூறும் ‘தி மெஸேஜ் அமீரக திரையரங்குகளில்!

0
257
Message story Prophet Muhammad show UAE Theaters midleeast Tamil news

Message story Prophet Muhammad show UAE Theaters midleeast Tamil news

முஹமது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை கூறும் ‘தி மெஸேஜ்’ என்ற திரைப்படம் முதன்முதலாக அரபு நாடுகளில் திரையிடப்படுகின்றது.

1976 ஆம் ஆண்டு லெபனான் வம்சாவளி அமெரிக்கரான முஸ்தபா அக்காத் என்பவரால் அரபி மற்றும் ஆங்கிலத்தில் முஹமது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றில் நடைபெற்ற பிரதான சில சம்பவங்களை கோர்வையாக எடுத்துக்கூறும் ‘The Message – தி மெஸேஜ்’ (தூது) என்ற திரைப்படம் அரபியிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாக வேறு வேறு நடிகர்களை வைத்து இயக்கி, தயாரிக்கப்பட்டது.

அரபியில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு ‘ரிசாலா’ (Risala) எனப் பெயரிடப்பட்டிருந்தது.

இத்திரைபடத்தில் முஹமது நபி (ஸல்) அவர்களையோ, அவர்களது உன்னதத் தோழர்களான 4 கலீபாக்களையோ உருவகப்படுத்தாமல் காட்சிகளில் வரும் பிற கதாபாத்திரங்கள் முஹமது நபி (ஸல்) அவர்களை நோக்கி பேசுவதை போன்ற கட்சிகளை கொண்டு மட்டுமே உணரச் செய்யப்பட்டது.

இத்திரை வடிவத்திற்கான அனுமதியை எகிப்தில் செயல்படும் அல் அஸ்கர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்கள் சில வழங்கியிருந்தன.

உலகெங்கும் மிகவும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் சவுதி அரேபியா, அமீரகம் உள்ளிட்ட பல அரபு நாடுகளிலும் தடைசெய்யப்பட்டது.

இத்திரைப்படம் அன்றைய கால தொழில்நுட்பமான டால்பி ஸ்டீரியோ (Dolby Stereo) நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது தற்போது இன்றைய நவீன தொழில்நுட்பமாக 4K Resolution, 5.1 வெர்சனில் மேம்படுத்தப்பட்டு அரபு நாடுகளில் இரு மொழிகளிலும் மறுவெளியீடு செய்கிறார் இயக்குனர் முஸ்தபா அக்காதின் மகன் மாலிக் அக்காத்.

அமீரக திரையரங்குகளில் முதன்முதலாக எதிர்வரும் ஜூலை 14 ஆம் நாள் முதல் திரையிடப்படுகிறது.

Message story Prophet Muhammad show UAE Theaters midleeast Tamil news