‘சம்பத் கொலை’ : பயங்கரமான சம்பவமாகும் : மூடிமறைக்க வேண்டாம் : மஹிந்த

0
821
mahinda gives Final Tribute Donald Sampath

நாட்டில் இயங்கும் பாதாள உலக குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(mahinda gives Final Tribute Donald Sampath)

சுட்டுக் கொல்லப்பட்ட கரந்தெனிய பிரதேச சபை உப தவிசாளர் டொனால்ட் சம்பத் ரணவீரவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கவலைக்குரியதும் பயங்கரமான சம்பவங்களே தற்போது நிகழ்கின்றன.

இதனை மூடி மறைக்காது உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

தெஹிவளை – கல்கிஸ்ஸை நகர சபை உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதேபோன்று உப தவிசாளர், இளைஞர் போன்றோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாதாள உலக குழுவினருக்கு அரசாங்கத்தை நடாத்திச் செல்ல அனுமதி வழங்க முடியாது.

இதனை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.

tags :- mahinda gives Final Tribute Donald Sampath
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites