பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரருக்கு ஏற்பட்ட பரிதாபம்!!! : ஒரு நொடியில் உயிர் பறிபோனது!

0
554
Kolkata cricket player death news Tamil

கொல்கத்தாவைச் சேர்ந்த தேபாபிரத் பால் என்ற இளம் கிரிக்கெட் வீரர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

21 வயதான தேபாபிரத் பால் கொல்கத்தாவின் செராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் விவேகானந்த பார்க் பேரிலி கழகத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக இணைந்துள்ளார்.

இவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு பெற்றோர்கள் எதிர்த்துள்ளனர். எனினும் பட்டதாரி படிப்பை நிறைவுசெய்த பிறகு கிரிக்கெட் விளையாட அனுமதித்துள்ளனர்.

இதன்படி தேபாபிரத் பால் B.com ஹானர்ஸ் பட்டப்படிப்பை நிறைவுசெய்து கிரிக்கெட் பயிற்சிப்பெற ஆரம்பித்துள்ளார்.

சம்பவம் நடந்தது எப்படி?

நேற்று மதியம் (10) 1.30 மணியளவில் தேபாபிரத் பால் அணி வீரர்களுடன் பயிற்சி பெற ஆரம்பித்துள்ளார். சில நிமிடங்களில் மழைத்துளிகள் விழ, சில வீரர்கள் அருகிலிருந்த கூரைக்குள் சென்று நின்றுக்கொண்டனர்.

எனினும் தேபாபிரத் பால் அவருடன் மூன்று வீரர்கள் மாத்திரம் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ராஹுல் மண்டேலா என்ற வீரருக்கு அருகிலிருந்த தேபாபிரத் சிலநொடிகளில் மின்னல் தாக்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதுதொடர்பில் ராஹுல் மண்டேலா குறிப்பிடுகையில்,

“தேபாபிரத் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி வழுந்த காட்சி நினைவில் இருக்கின்றது. முதலில் முழங்கால்கள் தரையில் பட்டது. பின்னர் அப்படியே எங்கள் கண் முன்னால் அவர் பின்னோக்கி தரையில் சரிந்தார்.

நான் அவரது நாடி துடிப்பை அவதானித்தேன். உடனடியாக அவரின் வாயோடு வாய் வைத்து ஒட்சிசன் பொடுக்க முயன்றேன். எனினும் அவரது உடலில் இருந்து எந்தவொரு அசைவுகளும் வெளிப்படவில்லை”

தேபாபிரத் பால் உடனடியாக அருகிலிருந்த ராமகிருஷ்ணா மிசன் சேவா பிரடிஸ்தன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் தேபாபிரத் பால் உயிரிழந்ததை உறுதிசெய்துள்ளனர்.

“தேபாபிரத் பால் எப்போதுமே ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் வீரராக ஆகுவதே அவரது கனவு மற்றும் இலட்சியம் எல்லாமே. எனினும் பெற்றோர் பட்டதாரி ஆகாமல் கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்ப மாட்டார் என அவருக்கு நன்றாக தெரியும். அதனால்தான் பட்டப்படிப்பை முடித்த அடுத்த கையுடன் கிரிக்கெட் பயிற்சியில் இணைந்தார்” என தேபாபிரத் பாலின் நெருங்கிய நண்பர் பஜ்ராதீபன் தெரிவித்தார்.

<<Tamil News Group websites>>

Kolkata cricket player death news Tamil,Kolkata cricket player death news Tamil, Kolkata cricket player death news Tamil