பிரான்ஸில் போக்குவரத்து முடக்கம்!

0
181
France weather cause accident roads

இல்-து-பிரான்ஸ் அனைத்து வீதிகளிலும் நேற்று போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. 508 Km வரை இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.France weather cause accident roads

நேற்று காலையிலேயே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீதி போக்குவரத்து நெரிசல் கண்காணிப்பு நிறுவனமான Sytadin இதனை கணக்கெடுத்து, உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று A6 சாலையிலும், A4 சாலையிலும் இருவேறு விபத்துக்கள் இடம்பெற்றன. அத்துடன் தொடர்ச்சியான மோசமான காலநிலையால் வீதிகள் மிக மோசமாக வழுக்கும் தன்மையை கொண்டுள்ளதாகவும், இதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொடர்ச்சியாக நிலவி வரும் மோசமான காலநிலையால், நேற்று பல்வேறு சிறு சிறு வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் இக் காலநிலை தொடரும் என்பதால் வாகனம் செலுத்துவோரை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**