பிரான்ஸில் பயணிப்போருக்கு நற்செய்தி- விரைவில் புதிய சேவை!

0
339
France introduce RER NG services 2021

RER சேவைகளில், தற்போது புத்தம் புதிய வசதிகளை மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. France introduce RER NG services 2021

இல்-து-பிரான்சுக்குள் அதிகளவு மக்களால் RER சேவைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனை மேம்படுத்தும் முகமாக RER NG என பெயரிடப்பட்ட புதிய சேவைகள் வரும் 2021 ஆம் ஆண்டிலிருந்து சேவைக்கு வர உள்ளது.

புத்தம் புதிய நவீன வசதிகளுடன் கூடிய இந்த சேவைகளை ஒரு நாளைக்கு 1.23 மில்லியன் மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. NG என்றால் nouvelle génération என அர்த்தமாகும்.

கிரான் பரி திட்டத்தின் கீழ் போக்குவரத்து சேவைகள் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு வரும் நிலையில், RER D மற்றும் E சேவைகள் தற்போது விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன.

RER NG சேவைகள் 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கபட்டதுடன், 2021 ஆம் ஆண்டு இவை சேவைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர 255 ரயில்கள் புதிதாக சேவையில் ஈடுபடும் எனவும், தற்போது பாவனையில் உள்ள ரயில்கள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**