பொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்!

0
233
false case media department denounces police

ஊடகத்துறையினரை அச்சுறுத்தும் வகையில் பொய் வழக்கு பதிவு செய்த கோவை மாநகர காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகத்துறையினர் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.false case media department denounces police

புதிய தலைமுறை தொலைக்கட்சியில் கடந்த வெள்ளியன்று வட்டமேஜை விவாதமேடை ஆவராம்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பா.ஜ.கவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினர். இதில் பா.ஜ.கவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திராஜன் பங்கேற்று பேசியும் ஏதும் எடுபடவில்லை. இதனைத்தொடர்ந்து தங்களின் குட்டு அடுத்தடுத்து அம்பலமாகிப்போகிறதே என்கிற விரக்தியில் இருந்த நிலையில் இயக்குநர் அமீர் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அப்போது தூத்துக்குடியில் மக்கள் கலவரம் செய்ததாய் சொல்லி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு 13 அப்பாவிகளின் உயிரை பலி வாங்கியதே. இங்கே கோவையில் சசிக்குமார் படுகொலையை யொட்டி நூற்றுக்கணக்கான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டும், காவல்துறையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட போது இந்த காவல்துறையினரின் என்ன செய்து கொண்டிருந்தது என கேள்வி எழுப்பினர். இதனால் பெரும் ஆத்திரமடைந்த பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டு நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தினர்.

இந்நிலையில் இந்தசம்பவத்திற்கு காரணமாக இருந்த பா.ஜ.கவினர் மீது எவ்வித வழக்கும் போடாமல், இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த செய்தியாளர் சுரேஷ் மீது பிணையில் வெளிவரமுடியாத அளவிற்கான வழக்கை கோவை மாநகர காவல்துறை பதிவு செய்துள்ளது. ஊடகத்தினரின் குரல்வளையை நசுக்கும் காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் ஊடகத்துறையினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து கருப்பு சட்டை அணிந்தும், கருப்புபட்டையை வாயில் கட்டியும் காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வரை முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றுஆணையர் அலுவலகம் முன்புஅமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கண்டன கூட்டத்தில் தீக்கதிர் நாளிதழின் பொறுப்பாசிரியர் கண்ணன், தமிழ்நாடு செய்தி ஆசிரியர் சங்கத்தின் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் அதிகமான ஊடகத்துறையினர் பங்கேற்று தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

More Tamil News

Tamil News Group websites :