ட்ராவிட்டின் கீழ் விளையாடும் வாய்ப்பை இழந்த சச்சின் மகன்!!!

0
193
Dravid Arjun Tendulkar latest cricket news Tamil

இந்திய 19 வயதுக்குற்பட்டோர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நான்கு நாள் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வருகின்றது.

இந்த போட்டித் தொடரின் நான்கு நாள் போட்டிகளுக்கான அணிக்குழாமில், இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இணைக்கப்பட்டுள்ளார்.

19 வயதுக்குற்பட்டோர் அணிக்குழாத்துக்குக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் பயிற்சியளித்து வருகின்றார். இவரின் பயிற்றுவிப்பின் கீழ், இந்திய அணி 19 வயதுக்குற்பட்டோர் அணி இம்முறை உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் இலங்கை செல்லவுள்ள 19 வயதுக்குற்பட்ட கிரிக்கெட் அணிக்கு ட்ராவிட் பயிற்சியளிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காரணம் அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஏ அணியினருக்கு பயிற்சியளிக்கவுள்ளார். இதனால் இந்திய 19 வயதுக்குற்பட்டோர் அணியின் பயிற்றுவிப்பை சற்று இடைநிறுத்தியுள்ளார். எனினும் இங்கிலாந்து ஏ அணிக்கெதிரான தொடருக்கு பின்னர் ட்ராவிட் இந்திய 19 வயதுக்குற்பட்டோர் அணிக்கு பயிற்சிகளை வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரவுள்ள இந்திய 19 வயதுக்குற்பட்டோர் அணிக்கு டபிள்யூ.வி. ராமன் மற்றும் நரேந்திர ஹிர்வானி ஆகியோர் பயிற்சிகளை வழங்குவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

<<Tamil News Group websites>>

Dravid Arjun Tendulkar latest cricket news Tamil, Dravid Arjun Tendulkar latest cricket news Tamil