2.0 பட ரிலீஸ் திகதி மீண்டும் தள்ளிவைப்பு : பலத்த ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

0
277
Upcoming Rajini Movie 2.0 Release Date Postponed,Upcoming Rajini Movie 2.0 Release Date,Upcoming Rajini Movie 2.0 Release,Upcoming Rajini Movie 2.0,Upcoming Rajini Movie
Photo Credit : Google Image

திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “காலா” படம் கடந்த 7-ஆம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக வெளியாகும் என்று எதிர்பார்த்த ”2.0” இன்னும் வரவில்லை.(Upcoming Rajini Movie 2.0 Release Date Postponed)

இந்த படத்தை ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுத்தனர். இந்தியாவில் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய செலவில் வந்தது இல்லை. 2015 டிசம்பர் மாதம் பட வேலைகளை துவக்கினர்.

ஒரு வருடத்துக்கு முன்பே முழு படமும் முடிந்து விட்டது. கடந்த டிசம்பரில் துபாயில் ஆடம்பரமாக பாடல் வெளியீட்டு விழாவையும் நடத்தி முடித்தனர். ஏப்ரல் மாதமே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டும் நடக்கவில்லை. அதன் பிறகு கடந்த மாதம் வரும் என்று எதிர்பார்த்தனர். அப்போதும் வராமல் படம் தள்ளிப்போனதால் காலாவை ரிலீஸ் செய்து விட்டனர்.

இப்போது ”2.0” எப்போது வெளியாகும் என்பது ரசிகர்களின் கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ”2.0” படத்துக்கு கிராபிக்ஸ்தான் முக்கியம். ”பாகுபலி” படத்துக்கு கிராபிக்ஸ் பெரிய பலமாக இருந்தது.

எனவே ”2.0” படத்துக்கும் ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர் ஷங்கர் உறுதியாக இருக்கிறார்.

வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் இந்த பணிகள் நடக்கின்றன. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை. இதுவே படம் தாமதத்துக்கு காரணம் என்கின்றனர். ஆகஸ்டு 15-ஆம் திகதி ”2.0” படத்தை ரிலீஸ் செய்து விட முடிவு செய்தனர். அன்று எப்படியாவது படம் வந்து விடும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால் மீண்டும் படத்தை தள்ளி வைத்து அடுத்த வருடம் ஏதேனும் ஒரு பண்டிகை நாளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ரிலீஸ் திகதியை இந்த வருடம் இறுதியில் அறிவிப்பார்கள் என்றும் கூறுகின்றனர். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

“எந்திரன்” படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 தயாராகியுள்ள இப்படத்தில், அக்‌ஷய்குமார் வில்லனாகவும், எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!

பாராட்டாமல் இருக்க முடியவில்லை : காதலியை புகழ்ந்து தள்ளிய விஷால்..!

சல்மான்கானை கொலை செய்ய முயற்சி : அதிர்ச்சியில் திரையுலகம்..!

நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

கமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Upcoming Rajini Movie 2.0 Release Date Postponed

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 11-06-2018