வேகப்புயல்களுடன் இலங்கை வரும் தென்னாபிரிக்கா!!!

0
341
South Africa squad vs Sri Lanka test series 2018

இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் இன்று உத்தியோகபூர்வமா அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஜுலை 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தொடருக்கான அணிக்குழாமை அறிவிப்பதில் தென்னாபிரிக்க அணி சிக்கலை எதிர்கொண்டிருந்தது. முதலாவதாக வில்லியர்ஸின் எதிர்பாராத விலகல், ரபாடா மற்றும் டேல் ஸ்டெயினின் உபாதை என்பன தென்னாபிரிக்க அணிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் இன்று அறிவிக்கப்பட்டுள்ள அணிக்குழாமானது தென்னாபிரிக்க ரசிகர்களை உற்சாகப்படுத்தக் கூடிய அணியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

உபாதை காரணமாக அணியில் விளையாடாமல் இருந்த டேல் ஸ்டெயின் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். தற்போது தென்னாபிரிக்க அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் போதும், டேல் ஸ்டெயினின் ஆனுபவம் அணிக்கு மிகப்பெரிய பலம்.

இதனையடுத்து உபாதையிலிருந்த காகிஸோ ரபாடாவும் அறிவிக்கப்பட்டள்ள அணிக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். தற்போதைய தென்னாபிரிக்க அணியின் முதற்தர வேகப்பந்து வீச்சாளரும் இவர்தான். இதற்கு அடுத்தப்படியாக ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய லுங்கி என்கிடி டெஸ்ட் அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார்.

தென்னாபிரிக்க அணி

 1. டீன் எல்கர்
 2. எய்டன் மர்க்ரம்
 3. ஹசிம் அம்லா
 4. பெப் டு பிளசிஸ் (தலைவர்)
 5. டெம்பா புவ்மா
 6. தீனிஸ் டி பிரைன்
 7. ஹென்ரிச் கிளாசன்
 8. வெர்னோன் பில்லாண்டர்
 9. காகிஸோ ரபாடா
 10. டேல் ஸ்டெயின்
 11. லுங்கி என்கிடி
 12. டெப்ரைஷ் செம்ஷி
 13. கேசவ் மஹாராஜ்
 14. சோன் வொன் பேர்க்

<<Tamil News Group websites>>

South Africa squad vs Sri Lanka test series 2018, South Africa squad vs Sri Lanka test series 2018