மன்னார் புதைகுழி அகழ்வு பணியில் பல்கலைக்கழக மாணவர்கள்?

0
918
Kelaniya University students joined human burial mines Mannar

(Kelaniya University students joined human burial mines Mannar)

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வு பணியின் பனிதொராவது நாளான இன்று களனி பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

இன்று குறித்த இடத்துக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை விஐயம் மேற்கொண்டு அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடமும் உரையாடினார்.

கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற வேளையில் குறித்த இடத்தில் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று நடைபெற்ற அகழ்வு பணியானது கடந்த நாட்களில் குழிக்குள் கண்டு பிடிக்கப்பட்ட மனித மண்டையோடுகள் எலும்புக் கூடுகள் ஆகியனவற்றை வெளியில் எடுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது.

இன்று நடைபெற்ற பணியில் களனி பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் ஆய்வு கற்கை நெறியில் ஈடுபட்டு வரும் 16 மாணவர்களும் பணியில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆ.கி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஷ தலைமையில் இந்த அகழ்வு பணி இடம்பெறுகின்றது.

அத்துடன் இன்று காலை இவ்விடத்துக்கு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சூசை அடிகளார் சகிதம் சென்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ அகழ்வு பணியை பார்வையிட்டதுடன் அங்கு கடமைபுரியும் அதிகாரிகளுடனும் உரையாடினார்.

(Kelaniya University students joined human burial mines Mannar)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites