ஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்!

0
575
difference male female brain structure, male female brain, tamilhealth news, tamil health tips in tamil, tamilhealth.com,

{ difference male female brain structure }

மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகின்றார்கள்.

நாம் பொதுவாக, ஆண், பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கின்றது, மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கருதுகின்றோம்.

ஆனால், உண்மையில் இரு பாலித்தனவருக்கும் உடல் மட்டுமல்ல, மூளையும் வித்தியாசப்படுகின்றது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறுவிதமாக வேலை செய்கின்றன என்பதே அவர்கள் சொல்லும் காரணம்.

பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களைக் கொண்டதாக இருக்கின்றது.

முதல் மையம், உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கின்றது.

இரண்டாவது மையம், மொழி வளத்துக்கானதாக உள்ளது. இது வார்த்தைகளையும் உரையாடல்களையும் கவனிக்கும் தன்மை கொண்டது.

மூன்றாவது மையம், முகத்தின் சாயலைக் கொண்டு ஒருவரைத் துல்லியமாக எடை போடும் தன்மை கொண்டது.

ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால் அவை வேறுவிதமாகச் செயல்படுகின்றன.

ஒரு விஷயத்தை பெண் பேசுவது போல் ஆணால் விவரித்துக் கூற முடிவதில்லை. ஓர் ஆண் தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல மொழியால் விலாவரியாகக் கூற முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பு கொண்டு அவர் மனதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஆண்களின் மூளை அமைப்பு, கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகின்றது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம்.

ஆனால் பெண்ணின் மூளை அப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் பெரிதாக இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மட்டும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

பெண்ணுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கின்றது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கின்றது. பெண்ணைப் பொறுத்தவரை, ஆண் அதீத அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அது போன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றிய சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே இரு தரப்புக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

Image result for male female brain

Tags: difference male female brain structure

<< RELATED HEALTH NEWS >>

*ஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்!

*ஆண்களின் ஆரோக்கியத்துக்கு சவால்விடும் இருசக்கர வாகனம்!

*கோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா?

*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…!

*உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…!

*உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை மட்டும் சாப்பிடாதீங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>

https://www.tamilnews.com/

http://tamilfood.com/

http:technotamil.com

http://tamilgossip.com/

http:cinemaulagam.com

http://sothidam.com/

http://tamilsportsnews.com