ஜனாதிபதியாக நான் வெற்றி பெற்றதும் பாராளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும். அதனை செய்யாததால் தான் இவ்வளவு அவமானமும், நெருக்கடியும்

0
536
education can solution all problems president maithripala sirisena
மத்­திய வங்கி பிணைமுறி குறித்த ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­கா­தி­ருந்­தி­ருந்தால் எனக்கு எந்த நெருக்­க­டியும் ஏற்­பட்­டி­ருக்­காது. எனக்கும் எனது குடும்­பத்­துக்கும் பிள்ளை­க­ளுக்கும் எந்த அவ­மா­னமும் செய்­தி­ருக்க மாட்­டார்கள்.
 (Central Bank appoint bailout suffered President disrespect family)
எப்­ப­டி­யி­ருப்­பினும் நாட்­டுக்­காக நான் செய்­ய­வேண்­டி­யதை செய்தேன். நான் எனக்கு வரு­கின்ற எந்தப்பிரச்­சி­னை­யையும் நாடு என்ற இடத்­தி­லி­ருந்தே பார்ப்பேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
நான் ஜனா­தி­ப­தி­யானவுடன் நூறுநாள் திட்­டத்­தை ­செய்­வ­தற்கு பதி­லாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தி­ருக்­க­வேண்டும். அப்­படி செய்­தி­ருந்தால் இன்­றைய எந்தப் பிரச்­சி­னையும் இருந்­தி­ருக்­காது. புதிய கட்­சி­களும் வந்­தி­ருக்­காது என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.
சிங்­கள வார இறுதிப் பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு வழங்­கி­யி­ருக்­கின்ற விசேட செவ்­வி­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.
அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:-
கேள்வி: சோபித்த தேரரின் நினைவு தின நிகழ்வில் நீங்கள் ஆற்­றிய உரையின் மூலம் நீங்கள் சவால்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக தெரி­கின்­றது. நீங்கள் அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட்­டி­ருக்­கின்­றீர்­களா? அல்­லது தனி­மை­யாக்­கப்­பட்­டுள்­ளீர்­களா?
பதில்: இல்லை நான் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் ஊழல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்து வில­கி­யுள்ளேன்.
கேள்வி: உங்­க­ளுடன் இணைந்து அர­சாங்கம் செய்­கின்­ற­வர்கள் ஊழல்­வா­திகள் என்று கூற ­வ­ரு­கின்­றீர்­களா?
பதில்: ஊழல்­வா­திகள் யார்? ஊழல் அற்­ற­வர்கள் யார் என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். இது முழு­நாட்டு மக்­க­ளுக்கும் தெரியும். எனது கொள்­கையை நான் மாற்ற முடி­யாது. நான் எப்­போ­துமே ஊழ­லுக்கு எதி­ரா­னவன். ஊழ­லுக்கு எதி­ராக போராட்டம் நடத்தும் போது அதில் ஊழல் அர­சி­யல்­வா­தி­களும் இணைந்து கொள்­கின்­றனர். இன்று அதுதான் நடந்­துள்­ளது. யார் சரி, யார் தவறு என்­பதை எதிர்­கா­லத்தில் மக்கள் புரிந்­து­கொள்­வார்கள். இன்று ஊழ­லற்ற அர­சி­யலே மக்­க­ளுக்குத் தேவைப்­ப­டு­கி­றது. அந்த மக்­களின் தேவை­யுடன் நான் எனது அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கையை முன்­னெ­டுப்பேன் அதற்­காக ஊழல் அர­சி­யலை எதிர்க்கும் அனை­வ­ருக்கும் நான் அழைப்பு விடு­கின்றேன். அதற்­காக கட்­சி­பே­த­மின்றி விரி­வு­பட்ட பல­மான தேசிய அர­சியல் சக்­தி­யொன்றை உரு­வாக்க மக்­களின் ஆத­ரவு கிடைக்கும் என நம்­பு­கின்றேன்.
கேள்வி : நீங்கள் உங்கள் கட்­சிக்குள் பாரிய மறு­சீ­ர­மைப்பை செய்­துள்­ளீர்கள், செயற்­பாட்டு அர­சி­யலில் இல்­லாத பேரா­சி­ரியர் ஒரு­வரை கட்­சியின் செய­லா­ள­ராக நிய­மித்­துள்­ளீர்கள். சுயா­தீன அணியும் உங்­க­ளுடன் இருக்­கின்­றது. அந்­தக்­குழு உங்­க­ளு­டனும், மஹிந்­த­வு­டனும் இணைந்து செயற்­ப­டு­கின்­றது. தாமரை மொட்­டுடன் இணை­வதா? சுதந்­தி­ரக்­கட்­சியின் மறு­சீ­ர­மைப்பின் நோக்கம்.
பதில் : இல்லை சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் கொள்­கையின் கீழ் இணைந்து செயற்­ப­ட­வேண்டும். சுதந்­தி­ரக்­கட்­சியில் இருந்­து­ கொண்டே நான் கூறு­கின்ற ஊழ­லுக்கு எதி­ரான அர­சியல் செயற்­பாட்டை ஆரம்­பிக்­க­ வேண்டும் என்று நம்­பு­கின்றேன். அத­னூ­டா­கவே மக்கள் எதிர்­பார்க்கும் திசையை நோக்கி பய­ணிக்க முடியும். இன்று இலங்­கை­யி­லுள்ள அனைத்­துக்­ கட்­சி­க­ளுக்­குள்ளும் உள்­ளகப் பிரச்­சி­னைகள் உள்­ளன. உள்­ளகப் பிரச்­சினை இல்­லாத எந்­தக்­ கட்­சியும் இலங்­கையில் இல்லை. எமது கட்சி அப்­ப­டி­யில்லை என்று யாரா­வது கூறினால் அது பொய்­யாகும். எனினும் நாட்டின் முன்­னேற்­றத்­திற்­காக அந்தப் பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­ கொள்­ள­வேண்டும். சரி­யான வேலைத்­திட்டம் என்­ன­வென்று அடை­யாளம் கண்டு இணைந்து செயற்­ப­டு­வதே இங்கு முக்­கி­ய­மா­கின்­றது. எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான அவ­மா­னங்கள் தடைகள் வந்­தாலும் அவற்­றுக்­கெல்லாம் முகம்­கொ­டுத்து நான் பரந்­து­பட்ட அர­சியல் செயற்­பாட்டை முன்­னெ­டுப்பேன்.
கேள்வி : உங்கள் மகன் தாம் சிறி­சே­ன­விற்கு மஹ­ர­கம பிர­தே­சத்தில் சொகுசு வீடொன்று இருப்­ப­தாக இணை­ய­த­ளங்­களில் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில் : மஹ­ர­க­மவில் பல வீடுகள் இருக்­கலாம். மஹ­ர­க­மவில் அதி­க மக்கள் வாழ்­கின்­றனர். அதனால் அப்­ப­கு­தியில் பெரிய வீடுகள் இருக்­கலாம். ஆனால் எனக்கோ எனது பிள்­ளை­க­ளுக்கோ மஹ­ர­க­மவில் எந்த வீடும் இல்லை. சமூக இணை­ய­த­ளங்கள் பல வதந்­தி­களைப் பரப்­பு­கின்­றன. இவற்­றுக்கு நாம் பதி­ல­ளிக்­கப்­போனால் எனக்கு வேறு வேலை செய்ய நேரம் இருக்­காது. எனவே அவற்றைக் கணக்கில் கொள்­ளாது நாட்­டுக்­காக சேவை­யாற்­ற­ வேண்­டி­யுள்­ளது. உண்­மை­யல்­லாத விடயம் மிக­ வேக­மாக சமூ­கத்தில் பரவி சென்­றாலும் அதன் உண்மைத் தன்மை தாம­த­மா­கி­யா­வது மக்­க­ளிடம் செல்லும். பொய்­யா­னத்­த­க­வல்கள் மின்­சா­ரத்தை வேகத்தை விட வேக­மாக பர­விச்­செல்லும். இவை திட்­ட­மி­டப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­படும் அர­சியல் சேறு­பூசும் செயற்­பா­டாகும். ஊழல்­வா­தி­களும் ஊழல்­வா­தி­களை காப்­பாற்­று­ப­வர்­க­ளுமே இவற்றை செய்­கின்­றனர். சமூக இணை­ய­த­ளங்கள் இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள், அச்சு ஊட­கங்கள் போன்­ற­வற்­றினால் எனக்கு எதி­ராக தெரிந்தோ தெரி­யா­மலோ சேறு­பூ­சப்­ப­டு­கின்­றது.
கேள்வி : உங்கள் ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் நூறுநாள் திட்­டமே முன்­ன­ணியில் இருந்­தது. ஆனால் அது­தொ­டர்பில் நீங்கள் அண்­மையில் சர்ச்­சைக்­கு­ரிய கருத்தை? வெளி­யிட்­டி­ருந்­தீர்கள். இந்த அர­சாங்­கத்தில் நெருக்­கடி அத­னூ­டா­கவே ஏற்­பட்­ட­தாக கூறு­னீர்கள்?
பதில் : இது தொடர்பில் நான் அண்­மையில் விளக்­க­ம­ளித்தேன். அர­சாங்கம் என்ற ரீதியில் அப்­போது நூறுநாள் வேலைத்­திட்­டத்தை எடுத்­தி­ருக்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. பாரா­ளு­மன்­றத்தில் 47 உறுப்­பி­னர்­களை வைத்­துக்­ கொண்டு ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் புகை­யிலைச் சட்டம், சுகா­தார கொள்கை, போன்ற விட­யங்­களை செய்­ய­வேண்­டி­யி­ருந்­தது. அன்று அவை அனைத்­தையும் நாங்கள் சுதந்­தி­ரக்­கட்சி எம்.பி.க்களின் ஆத­ரவைப் பெற்றே செய்தோம். இன்று அவற்றை மறந்­து­விட்­டனர். நினைவு இருந்­தாலும் அவ்­வாறு எதுவும் நடக்­க­வில்லை என்ற தோற்­றத்தை காட்ட முயற்­சிக்­கின்­றனர். சிலர் நாம் சுதந்­தி­ரக்­கட்­சியைப் பொறுப்­பேற்­றதால் பிரச்­சி­னைகள் எற்­பட்­டன எனக் கூற முற்­ப­டு­கின்­றனர். நான் சுதந்­தி­ரக்­கட்­சியை பொறுப்­பேற்­றதன் கார­ண­மா­கவே நூறுநாள் திட்­டத்தின் பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடிந்­தது. நூறுநாள் திட்டம் எனக்குத் தெரிந்­தி­ருக்­க­வில்லை என்று கூற­வில்லை. இதனை யார் செய்­தது என்று எனக்கு தெரி­யாது என்றே கூறினேன். எனினும் சில ஊட­கங்­களும் எனது எதி­ரி­களும் இதனை திரி­பு­ப­டுத்தி வெளி­யிட்­டனர். இது எனக்குத் தெரி­யாது என்று கூறி­ய­தாக செய்தி வெளி­யிட்­டனர். ஆனால் நூறுநாள் திட்­டத்தை உரு­வாக்­கி­யது யார் என்று எனக்குத் தெரி­யாது என்றே நான் கூறினேன். நாங்கள் அதனை செயற்­ப­டுத்­தினோம். ஆனால் உண்­மை­யி­லேயே அதனை செயற்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை. நான் ஜனா­தி­ப­தி­யா­கி­வுடன் பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தி­ருக்­க­வேண்டும். அப்­படி செய்­தி­ருந்தால் இன்­றைய எந்தப் பிரச்­சி­னையும் இருந்­தி­ருக்­காது. புதிய கட்­சி­களும் வந்­தி­ருக்­காது.
கேள்வி : அர­சியல் ஸ்திர­மற்ற தன்­மை­யு­ட­னேயே கூட்­ட­ர­சாங்கம் வந்­தது. அதன் தலை­வ­ருக்கு எப்­போதும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்­க­வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கின்­றது. இதி­லி­ருந்து வில­கு­வ­தற்கு உங்­க­ளுக்கு நோக்கம் இருக்­கி­றதா? சரி­யான பய­ணத்தை மேற்­கொள்ள இன்னும் நேரம் இருக்­கி­றது அல்­லவா?
பதில் : நிரந்­த­ர­மான வேலைத்­திட்­ட­மொன்­றுக்கு செல்ல வேண்­டு­மானால் பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்­க­வேண்டும். பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து தேர்­த­லுக்கு செல்ல வேண்டும். ஆனால் தற்­போது பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­ப­தியால் கலைக்க முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை எம்.பி.க்களின் விருப்­பத்­து­ட­னேயே அதனைக் கலைக்­கலாம். அதனால் பாரா­ளு­மன்றம் இப்­போ­தி­ருக்­கின்ற நிலை­யி­லேயே இணைந்து செயற்­ப­டு­வதே முடி­யு­மா­ன­தாகும். உள்­ளக ரீதியில் அனைத்­துக்­கட்­சி­க­ளுக்கும் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. இது நாட்டின் எதிர்­கா­லத்தைப் பாதிக்கும் எனவே நாட்டை ஆத­ரிக்கும் அனை­வரும் அந்த நெருக்­க­டி­களை மறந்து நாட்­டுக்­காக இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்டும். பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­பது என்றால் பெரும்­பா­லான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் விருப்­பத்­துடன் கலைத்து தேர்­த­லுக்கு செல்­ல­வேண்டும்.
கேள்வி: பிணை­முறி வர்த்­த­கர்­க­ளிடம் காசோலை பெற்ற 118 பேரின் பட்­டியல் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. சிலர் 167 இருப்­ப­தா­கவும் கூறு­கின்­றனர். இந்தப் பெயர்ப்­பட்­டியல் உங்­க­ளுக்கு மட்­டுமே தெரியும் எனக்­கூ­றப்­ப­டு­கின்­றது. ஊழ­லுக்கு எதி­ராக போராடும் நீங்கள் ஏன் இந்­தப்­பட்­டி­யலை வெளி­யி­டாமல் இருக்­கின்­றீர்கள்?
பதில்: இது தொடர்பில் என்­னிடம் கேட்­ப­வர்கள் தெளி­வில்­லாமல் இருக்­கின்­றனர். ஜனா­தி­பதி தனக்­கி­ருக்­கின்ற அதி­கா­ரத்தின் ஊடா­கவே விசா­ரணை ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­கின்றார். பிணை முறி தொடர்­பாக உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்­களைக் கொண்டு ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அந்த ஆணைக்­குழு வெளி­யிட்ட பரிந்­து­ரைகள், செய்­யப்­ப­ட­வேண்­டிய செயற்­பா­டுகள் என்­ப­வற்றை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கும் பொலி­ஸா­ருக்கும் மத்­திய வங்­கிக்கும் பாரப்­ப­டுத்­தி­யுள்ளேன். தற்­போது அந்த செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றன. அதற்­கி­டையில் இந்த ஆணைக்­குழு அறிக்­கையில் உள்ள விட­யங்­களை வெளிப்­ப­டுத்தும் சட்ட உரிமை ஜனா­தி­ப­திக்கு இல்லை. எனவே வெறு­மனே கூச்­சலிடும் மூளையில் பிரச்­சினை உள்­ள­வர்கள் இதனைப் புரிந்­து ­கொள்­ள­வேண்டும். மேடையில் வீரர்கள் ஆகா­மாமல் உண்­மையைப் புரிந்­து ­கொள்­ள­வேண்டும். இது­போன்ற ஒரு அறிக்கை தொடர்பில் இருக்­கின்ற சட்ட நிலை­மைகள் அர­சி­ய­ல­மைப்பு நிலை­மைகள் என்­ப­வற்றின் ஊடா­கவே நட­வ­டிக்கை எடுக்க முடியும். முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணைகள் ஊடா­கவே அவர்கள் யார் என்­பது தெரி­ய­வரும். அதனை தவிர்த்து இந்த அறிக்­கைக்குள் இப்­ப­டி­யொரு பட்­டியல் இருப்­ப­தாக எனக்குத் தெரி­யாது.
கேள்வி : பிணை­முறி ஆணைக்­குழு நிய­ம­னத்­து­ட­னேயே உங்­க­ளுக்கு எதி­ரான நெருக்­க­டிகள் உரு­வா­கின. அப்­படி செய்­தி­ருக்­கா­விடின் நீங்கள் இனி­மை­யான வாழ்க்கை வாழ்ந்­தி­ருக்­கலாம். இது தொடர்பில் உங்கள் கருத்து?
பதில் : யார் தனிப்­பட்ட ரீதியில் எனக்குத் துரோகம் செய்­தாலும் அவ­மா­னப்­ப­டுத்­தி­னாலும் நான் செய்­தது சரி. அது நாட்­டுக்­காக செய்த விடயம். நீங்கள் கூறு­வது போன்று இந்த ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­கா­தி­ருந்தால் எனக்கு எந்த நெருக்­க­டியும் ஏற்­பட்­டி­ருக்­காது. எனக்கும் எனது குடும்­பத்­திற்கும் பிள்­ளை­க­ளுக்கும் எந்த அவ­மா­னமும் செய்­தி­ருக்க மாட்­டார்கள். எப்­ப­டி­யி­ருப்­பினும் நாட்­டுக்­காக நான் செய்­ய­வேண்­டி­யதை நான் செய்தேன். நான் எனக்கு வரு­கின்ற எந்தப் பிரச்­சி­னை­யையும் நாடு என்ற இடத்­தி­லி­ருந்தே பார்ப்பேன். இந்த ஆணைக்­கு­ழுவை நிய­மித்ததன் ஊடா­கவே என்­னைப்­பற்றி தவ­றான விட­யங்­களை முன்­வைத்து சிலர் விமர்­சிக்­கின்­றனர்.
கேள்வி : பிரதி சபா­நா­யகர் தெரிவு விட­யத்தில் உங்கள் தரப்பு கள­மி­றக்­கிய சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே தோல்வி அடைந்தார். இது உங்­க­ளது பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்தை மதிப்­பிடும் ஒரு அடை­யா­ளமா?
பதில் : இல்லை. பாரா­ளு­மன்ற செயற்­பா­டுகள் வித்­தி­யா­ச­மா­னவை. பாரா­ளு­மன்­றத்தில் சபா­நா­யகர் , பிரதி சபா­நா­யகர் ஆகி­யோரை தெரிவு செய்யும் போது கட்­சி­களின் தீர்­மா­னத்­திற்கு அப்பால் சென்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுதந்­தி­ர­மாக வாக்­கு­களைப் பயன்­ப­டுத்­து­வார்கள். அப்படித்தான் இந்த பிரதி சபாநாயகர் தெரிவும் நடைபெற்றது. அதற்கு மாறாக இந்த முடிவால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இது 225 எம்.பி.க்களின் உரிமை. அதனை தவிர வேறு எந்த நிலைப்பாடும் எனக்கு இல்லை.
கேள்வி : 20 ஆவது திருத்த சட்டத்திற்கு நீங்கள் உடன்படுகின்றீர்களா?
பதில் : 20 ஆவது திருத்த சட்டத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பார்த்தேன் இன்றுவரை எனக்கு அதன் பிரதிகள் கிடைக்கவில்லை. எனவே அதனால் நான் ஒன்றும் கூற முடியாது.
கேள்வி : ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக கூறியே நீங்கள் அதிகாரத்திற்கு வந்தீர்கள். எனினும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவினால் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிபரப்புக் கோபுரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு முன்னர் இந்த தொலைக்காட்சி உங்களை விமர்சித்தது. எனவே இந்தத் தடையின் பின்னால் உங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றதே?
பதில் : இந்த சம்பவத்துடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது நிறுவன ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானம். நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அந்த நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் செயற்படுகின்றார்கள். அதனைத் தவிர்த்து என்னுடைய தனிப்பட்ட எந்தவிதமான தொடர்பும் நீங்கள் கூறும் இந்தக் காரணங்களுடன் இல்லை.
ஜனா­தி­ப­தி­யாக நான் வெற்­றி­பெற்­றதும் பாரா­ளு­மன்­றத்தை கலைத்­தி­ருக்­க­ வேண்டும். அதனை செய்யாததால் தான் இவ்வளவு அவ­மா­னமும், நெருக்கடியும். எனத் தெரிவித்திருந்தார்.
tags :- Central Bank appoint bailout suffered President disrespect family
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites