இந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக ஆசிய கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ்!!!

0
170
Bangladesh beat India Asia Cup 2018 news Tamil

மலேசியாவில் நடைபெற்று வந்த ஆசிய கிண்ண மகளிருக்கான டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, பஙகளாதேஷ் மகளிர் அணி முதன்முறையாக சம்பியனாகியுள்ளது.

ஆறு முறை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியிருந்த இந்திய மகளிர் அணி இறுதி பந்தில் தங்களது தோல்வியை தழுவியது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த பங்களாதேஷ் மகளிர் அணி களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணி தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணியின் தலைவி கஹுர் மாத்திரம் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில், ஏனைய வீராங்கனைகள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிந்தனர்.

போட்டியின் 20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் ருமானா அஹமட் மற்றும் டுல் குப்ரா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தட்டுத்தடுமாறி போட்டியின் இறுதி பந்தில் 7 விக்கட்டுகளை இழந்து வெற்றியை பெற்றது.

பங்களாதேஷ் அணியின் நிகர் சுல்தானா 27 ஓட்டங்களையும், ருமானா அஹமட் 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பங்களாதேஷ் அணிக்கு இரு பந்து ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இறுதிப்பந்து ஒவரை இந்திய அணியின் தலைவர் கஹுர் வீச, முதலாவது பந்துக்கு துடுப்பெடுத்தாடிய சஞ்சிதா ஒரு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இரண்டாவது பந்தில் ருமானா நான்கு ஓட்டங்களை விளாசினார்.

இந்நிலையில் 4 பந்துகளுக்கு 4 ஓட்டங்கள் என்ற நிலையில், ருமானா மூன்றாவது பந்தில் ஒரு ஓட்டத்தை பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து நான்காவது பந்தை அடித்த சஞ்சிதா பிடிகொடுத்து ஆட்டமிழக்க, 2 பந்துகளுக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

பின்னர் ருமானா பந்தை அடித்துவிட்டு இரண்டு ஓட்டங்களை பெற முற்பட்டபோது, ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் ஒரு பந்துக்கு 2 ஓட்டங்கள் அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

களத்துக்கு புதிதாக வந்த ஜஹனரா சிறப்பாக பந்தை அடித்து, 2 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பங்களாதேஷ் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

இதன்மூலம் ஆறுமுறை சம்பியன் கிண்ணத்தை இந்த தொடரின் இரண்டாவது முறையாகவும் வீழ்த்திய பங்களாதேஷ் அணி தங்களது முதல் கிண்ணத்தை வென்றது.

இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ருமானா தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்பிரீட் கஹுர் தெரிவுசெய்யப்பட்டார்.

<<Tamil News Group websites>>

Bangladesh beat India Asia Cup 2018 news Tamil, Bangladesh beat India Asia Cup 2018 news Tamil, Bangladesh beat India Asia Cup 2018 news Tamil