பிரான்ஸில் விமான தொழிற்சங்கங்களின் புதிய நடவடிக்கை!

0
895
Air France new strike called June 23-26

தொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான சம்பள உயர்வுக்கான நீண்டகால ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, ஏர் பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் ஜூன் 23 முதல் 26 வரை ஒரு புதிய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளன.Air France new strike called June 23-26
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை பொறுத்தே இவ் வேலைநிறுத்தம் மேற்கொள்ளுவதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்பட்ட கணிசமான வேலைநிறுத்தங்கள் மற்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Jean-Marc Janaillac இன் விலகல் போன்றவற்றை தொடர்ந்து நீண்ட இடைவெளியின் பின்னர் ஏர் பிரான்ஸ் தொழிற் சங்கங்கள் மீண்டும் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது,
.
பத்து தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட விவாதத்திற்கு பின்னரே இந்த புதிய வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு விடப்பட்டது. இதில் விமானிகள், விமான காரியதரிசிகள் மற்றும் விமான பணிப்பெண்கள், பணியாளர்கள் மற்றும் தரைப்படை ஊழியர்களின் பிரதிநிதிகளும் அடங்குவர்.

மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஏர்பிரான்ஸ் வேலைநிறுத்தங்கள் 300 மில்லியன் யூரோக்களுக்கு அதிகமான நட்டத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**