மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். வீண் பேச்சு தேவையில்லை பிரதமர் ரணில்

0
329
Lankan prime minister ranil wickramasinghe challenge mahidha rajapaksha

வரியை எவ்வாறு குறைக்க வேண்டும் என்பது பற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Lankan prime minister ranil wickramasinghe challenge mahidha rajapaksha

ரண்வல எஸ்வத்த என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பிரதமர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் அதிகாரத்திற்கு வந்தால் நாட்டின் வரியை 20 சதவீதத்தால் குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்று சட்டிக்காட்டிய பிரதமர், அதிகாரத்தில் இருந்த காலப்பகுதியில் கடன் பற்றி அவர் உலக சாதனையை நிலை நாட்டியதாகவும் கூறினார்.

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளினால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வல்லமை கிடைத்துள்ளது. கிராமங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இலங்கையின் கடன் ஏழாயிரத்து 391 பில்லியன் ரூபா வரை அதிகரித்தது. இதனால் இலங்கையின் கடன் மூன்று மடங்கால் அதிகரித்தாக அவர் கூறினார்.

நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடனை அடைப்பதற்காக வரி அறவிடப்படவில்லை. கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே இதற்கான காரணமாகும். 2023ம் ஆண்டு காலப்பகுதியில் கடனை திரும்பிச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமுலிலுள்ள கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அமுலிலுள்ள வரிகளை குறைப்பது பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 2015ம் ஆண்டில் அரசாங்கம் ஆட்சியை ஏற்ற போது அபிவிருத்திக்கான நிதி நாட்டில் இருக்கவில்லை என்றும் பிரதமர் விபரித்தார்.
 Lankan prime minister ranil wickramasinghe challenge mahidha rajapaksha

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites