கண்டியில் விசேட அதிரடிப் படையினருக்கும் பாதாள உலக கோஷ்டிக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சமர்; இருவர் பலி

0
996
Two persons shooting parade Special Task Force Underworld Madawale

(Two persons shooting parade Special Task Force Underworld Madawale)

கண்டி மாவட்டத்தில் மடவளை என்ற இடத்தில் விசேட அதிரடிப்படைக்கும் பாதாள உலகக் கோஷ்டி ஒன்றுக்குமிடையே இடம் பெற்ற துப்பாக்கிச் சமரில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

வத்தேகம பொலிஸ் பிரிவில் உள்ள மடவளை தெல்தெனிய வீதியில் என்று முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது;

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின்படி விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்குரிய சொகுசு வாகனத்தை பின் தொடர்ந்து வந்து பின்னர் மடவளையில் முற்றுகையிட்டுள்ளனர். மடவளை பிரதான சந்தியைக் கடந்து 150m தூரத்திலுள்ள சன நடமாட்டம் குறைந்த இடத்தில் வாகனத்தில் வந்தவர்களை கைது செய்வதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது வாகனத்திலிருந்த இரு சந்தேக நபர்களும் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முயற்சித்த போது பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதன் காரணமாக தொடர்புடைய இரு பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். சடலம் கட்டுக்காஸ்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரெட் விசாரணைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரும் பிரபல பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த மாகந்துர மாதூஸ் என்பவரின் கையாட்கள் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் இரண்டு கைத்துப்பாக்கிகள் கைவிடப்பட்டுள்ளன. இவை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ரக ஆயுதமெனப் பொலிஸார் தெரிவித்தனர். வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Two persons shooting parade Special Task Force Underworld Madawale
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites