இமாம்களை நாடுகடத்தும் ஆஸ்திரியா – 7 பள்ளிவாசல்கள் மூடல்

0
694
tamilnews Austria close seven mosques deport imams crackdown

(tamilnews Austria close seven mosques deport imams crackdown)

வெளிநாடுகளின் நிதியுதவியுடன் இயங்கும் ஏழு இஸ்லாமிய மசூதிகள் மற்றும் பல மத நிறுவனங்களை மூடவுள்ளதாக ஆஸ்திரியா அறிவித்துள்ளது.

இதன்போது, சுமார் 50 இஸ்லாமிய மத குருக்களை நாடுகடத்தப் போவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

மத்திய நீரோட்டத்தோடு இணையாத சமூகங்கள் ஆஸ்திரியாவில் நிலைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று விளக்கிய அந்த நாட்டின் சான்செலர் செபாஸ்டியன் குர்ஸ், அரசியல் சார்புடைய இஸ்லாமை தடுக்கின்ற நடவடிக்கையே இதுவென குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியால் ஆதரவு அளிக்கப்படும் பல மசூதிகள் உள்பட பல இடங்களில் அதிகாரிகளால் புலனாய்வு நடத்தப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் உலகப்போரின் போது நிகழ்ந்த கலிபோலி சண்டையை, மூடப்படுகின்ற மசூதிகளில் ஒன்று நடித்துக்காட்டியமை சர்ச்சையை உருவாக்கியது.

துருக்கி படையினரைப் போல ஆடை அணிந்து சிறார்கள் அந்த நாடகத்தில் நடித்திருந்தனர்.

இந்த நடவடிக்கை ஆஸ்திரியாவில் தொடர்ந்து நிலவும் இஸ்லாம் மீதான பயம் மற்றும் இனவெறி பிரதிபலிக்கிறது என்று துருக்கி அதிபரின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலின் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகங்களை இலக்கு வைத்து இழிவான அரசியல் நடத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

(tamilnews Austria close seven mosques deport imams crackdown)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites