ஜனாதிபதி மாளிகையில் பூட்டிய அறையிலிருந்து ஊழியரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

0
408
Mullaitivu Puthuvettuvavan reported missing dead body recovered

employee staff Delhis presidential palace found rotten today

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் இருந்து ஊழியர் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள ரைசினா ஹிஸ்ல் பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. தற்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரிபுரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

இதனை அடுத்து, அறையின் கதவை உடைத்து பார்த்த பின்னர் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு நான்காம் நிலை ஊழியராக இருக்கும் த்ரிலோகி சாந்த் என்பவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனால், அவர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேகத்திற்குரிய மரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

employee staff Delhis presidential palace found rotten today

More Tamil News

Tamil News Group websites :