எனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்

0
747
Uttar Pradesh Trans Woman Share Life Experience Latest Gossip

இந்த உலகில் என்னவோ தெரியவில்லை திருநங்கைகள் என்றாலே மக்கள் ஒரு விதமாக ஏளனமாக தான் பார்கின்றார்கள் . அவர்களும் மனிதர்கள் தான்,அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தி காட்டியவர் தான் லக்னோவை சேர்ந்த கிருத்திகா.(Uttar Pradesh Trans Woman Share Life Experience Latest Gossip )

உத்திர பிரதேசத்தை சேர்ந்த கிருதிக்கா 22 வயதாகும் திருநங்கை .எல்லா திருநங்கைகளையும் போல பல இன்னல்களை அனுபவித்து வந்தார் .

ஜென்டர் டிஸ்போரிய’ என்பது, எதிர் பாலரின் பாவனை மற்றும் உள்ளுணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தாமக்குள் காணும் ஒரு நிலை.

கிருத்திகா இந்த ஜென்டர் டிஸ்போரியவுடன் 22 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். பல அவமானங்களுக்கு உள்ளான இவர், அண்மையில் பாலின மறுசீரமைப்புக்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

அக்டோபரில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட கிருத்திகா, தற்போது திருமணம் செய்துகொண்டு ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

அறுவை சிகிச்சை நடத்திய மருத்துவமனையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்துக்கொண்ட கிருத்திகாவும் மற்றொரு, அறுவை சிகிச்சை மேற்கொண்டவரான தக்ஷ், தங்கள் வாழ்க்கை போராட்டங்களைக் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய அவர்கள், ‘நான் ஒரு ஆண் உடம்பில் சிக்கிய பெண், பள்ளியில் சிக்கி, கல்லூரியில் அவமானப்பட்டு, வேலை-நிராகரிப்புகளை சந்தித்தேன்.

ஒரு நாள் சிலர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றனர். அச்சம்பவம் என்னை கல்லூரியில் இருந்து விலக தூண்டியது. தனிமைப்படுத்தியது.

பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம் தனது ஆத்மாவை சிறையில் அடைத்துவைத்திருந்தாக உணர்ந்த ஆண்குறி உறுப்பை இப்போது நான் அகற்றிவிட்டேன்’ என்றார்.

இவ்வாறு கிருத்திகா கூறியபோது அவரது முகத்தில் பல இன்னல்களுக்கு பின் கிடைத்த தெளிவான நிம்மதியை பார்க்க முடிந்தது.

இதுகுறித்து மற்றொரு திருநங்கையான தக்ஷ் கூறியதாவது,

‘மன நிம்மதியை அடைய, என் உண்மையான சுயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பெண்ணாக முடிவு செய்தேன்’ என்றார்.

பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட தக்ஷ், தற்போது பிரபலமான பேஷன் ஷோக்களில் கலந்துக்கொண்டு தனது வாழ்க்கையை தான நினைத்தது போன்று வாழ்கிறார்.

தில்லி, ஷாலிமார் பாகில், ஃபோர்டிஸ் மருத்துவமனையின், பிளாஸ்டிக், ஒப்பனை மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை பிரிவு இயக்குனர் ரிச்சி குப்தா இதுகுறித்து பேசுகையில்,

‘பொதுவாக, சிகிச்சையின் பகுதிகளாக ஹார்மோன் சிகிச்சை, பின்னர் ஆண்குறி நீக்கம், பின் புதிய வஜினா, கிளிட்டோரிஸ் மற்றும் லேபியா ஆகியவற்றை புனரமைக்கும் (feminising genitoplasty)அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

சிலருக்கு மார்பக விரிவாக்கம் தேவைப்படுகிறது. இதில் ஹார்மோன் சிகிச்சை பதினெட்டு மாதங்களுக்கு கொடுத்த பிறகும் போதுமான மார்பக விரிவாக்கம் இல்லை என்றால் செயற்கை முறையாக சிகிச்சையளிக்கப்படுகிறது. அவரவர் விருப்பத்தின்படி சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதற்கு துணை சிகிச்சைகளாக மூக்கு, தாடை, நெற்றி என முக சீரமைப்பு சிகிச்சை, முடி, குரல் மாற்றும் சிகிச்சை என அனைத்துக்கும் அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன.

எனவே ஒரு டிரான்ஸ்மேன் அல்லது டிரான்ஸ்வுமனால் சகஜமாக மற்றவர்களை போல் வாழ முடியும். ஏன், சாதாரண பாலியல் வாழ்க்கை கூட வாழ முடியும். ஆனால், இயற்கைக்கு மாறாக குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது.

ஆனாலும், சிகிச்சைக்கு முன்பே அவர்களின் விந்தணுக்கள் அல்லது முட்டைகளை சேகரித்து பாதுகாக்க முடியும். மேலும், டெஸ்ட் டியூப் பேபி, சரோகஸி முறைகளில் குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் ‘ என்றார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword: Uttar Pradesh Trans Woman Share Life Experience Latest Gossip