ஓய்வு கடிதத்தை முன்கூட்டியே ஒப்படைத்த சுரேன் ரத்வத்த

0
220
tamilnews SriLankan Airlines CEO Suren Ratwatte announces retirement

(tamilnews SriLankan Airlines CEO Suren Ratwatte announces retirement)
ஶ்ரீ லங்கன் விமான சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேன் ரத்வத்த தனது ஓய்வு தொடர்பான கடிதத்தை முன் கூட்டியே ஒப்படைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை அவர் இன்று ஒப்படைத்ததாக ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சிக்கன விமான நிறுவனமான மிஹின் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ரத்வத்தே நியமிக்கப்பட்டார்.

அவர் இரு விமான நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் மூலோபாய நிர்வாகத்தை கையேற்றுக் கொண்டார்.

விமானத் துறையில் 30 வருட அனுபவம் கொண்ட ஒரு விமானியான இவர் 1984 ஆம் ஆண்டு ஏர் லங்காவில் தனது தொழிலை ஆரம்பித்து 1989 ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.

அதன்பின்னர் நிறுவனத்தில் பல பதவிகளை அவர் வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

(tamilnews SriLankan Airlines CEO Suren Ratwatte announces retirement)

More Tamil News

Tamil News Group websites :