தலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்!

0
853
Jaffna Varany Famous Temple Cast Issue

போரினால் ஏற்பட்ட மனித பேரவலங்கள் எங்கும் நிறைந்திருக்கும் இந்த இனத்தில் அவர்கள் மத்தியில் இருந்து வரும் சாதி பாகுபாடுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். Jaffna Varany Famous Temple Cast Issue

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் இருந்த சமுகத்தில் இந்த சாதி பாகுபாடு மிகவும் சரியான முறையில் அடக்கப்பட்டிருந்தது. சாதி பாகுபாடு காட்டுவோர் தயவு தாட்சணியம் இன்றி தண்டிக்கப்படு வந்தனர்.

காலப்போக்கில் சாதியம் என்னும் சமுக வேறுபாடு ஒரு கட்டுக்குள் இருந்தது. ஆனாலும் நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த இந்த மன உணர்வு விடுதலைப்புலிகளின் காலத்துக்கு பின்னர் மீண்டும் உயிர் பெற தொடங்கியுள்ளது.

சமுக வலைத்தளங்களில் பல சாதி பிரச்சனைகள் பற்றி பகிரங்க விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை கண்கூடாக காண முடிகின்றது. அதே போல பல ஊர்களில் சாதி சண்டைகளும் வலுப்பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் , யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழாவில் சாதி பாகுபாட்டின் விளைவாக ஒரு பகுதி மக்களை கோவிலுக்குள் நுழைவதை தடுத்துவிட்டு ஜேசிபி கனரக வாகனம் மூலம் தேர் இழுத்த சம்பவம் எமது சமுகம் மீண்டும் சாதிய வழியில் சென்றுவிட்டதை கூறி நிற்கிறது.

கோவில்களில் தேர் இழுக்கும் திருவிழா நடத்தப்படுவதன் ஒரு நோக்கம் ஊர் கூடி தேர் இழுக்கும் போது நிலை நாட்டப்படும் ஒற்றுமையை வளர்த்தல். அந்த ஒற்றுமையை சாதி அடிப்படையில் குலைத்து தேர் திருவிழா நடத்துவது என்பது எந்தவிதத்திலும் பயனில்லாத ஒன்று.

அதிலும் யாரோ Joseph Cyril Bamford என்னும் வெளிநாட்டு பேர்வழிகள் கண்டுபிடித்த JCB இயந்திரத்தில் உள்ள தூய்மை சக இனத்தில் உள்ள மக்கள் மீது இருக்காது என நினைத்து கொண்ட முட்டாள்தனம் மிகவும் வேதனைக்குரியது.

இன்றைய காலகட்டத்தில் எமது இனத்தை கூறு போட்டு இன ஒற்றுமையை குலைத்து அதன் மூலம் இலாபம் தேட பல தரப்புகள் கங்கணம் கட்டி கொண்டு அலையும் வேளையில் நாமே எமக்குள் பிரிவினைகளை வளர்த்து கொள்ளல் பலவிதமான பாதகங்களை கொண்டுவரும்.

எமது மக்கள் ஒரு உண்மையை உணரவேண்டும். நாம் எமது ஆயுத போராட்டத்தின் வழியில் ஓய்வு கொண்டிருந்தாலும் எமது உரிமைகள் இன்னமும் வெல்லப்படவில்லை. எமது இனத்தின் ஒற்றுமையே இனிமேல் எமது பலமாக இருக்கவேண்டிய காலகட்டத்தில் தான் நாம் அனைவரும் இப்போது உள்ளோம். பல தரப்பட்ட அரசியல் கட்சிகள் கூட தமக்குள் கூட்டுவைத்து கொள்வதை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கும் நாம் சமுக மட்டத்தில் பிளவுகளை ஏற்படுத்தி கொள்ளல் சரியான முறையன்று.

எமது ஒற்றுமை குலைக்கப்பட்டு எமது ஒட்டுமொத்த இனத்தின குரல் கொடுப்பு என்பது சமுக சாதி மட்டத்தில் உடைக்கப்படும் போது நாம் எமது உரிமைகளை இழந்த ஏதிலிகளாக காலம் முழுவதும் வாழவே வழிவகுக்கும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் சாதி என்பதை தமிழ் சாதி என்னும் வகைக்குள் மாத்திரம் அடக்கி வாழ பழகிகொள்ளுங்கள்.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு