தொடர்ச்சியாக கிடைத்த ஒரு மில்லியன் யூரோ பரிசு!

0
677
French man won million Euro 2 times

ஒரு பிரான்ஸ் குடிமகன் கடந்த 18 மாதங்களுக்குள் ஒரே லொத்தர் சீட்டில் இருமுறை ஒரு மில்லியன் யூரோக்களை வென்றுள்ளார். French man won million Euro 2 times

பாரிஸ் அருகே உள்ள கிழக்கு Haute-Savoie பிராந்தியத்தை சேர்ந்த குறித்த நபர் 2016 இல் நவம்பர் 11 மற்றும் கடந்த may 18 ம் திகதியும் அவர் ஒரு மில்லியன் யூரோக்களை வென்றுள்ளார் என லீ பாரிஸியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கடந்த 2016 நவம்பரில் யூரோ மில்லியன் டிக்கெட் வாங்கினார். இதனை வாங்குவோர் மை மில்லியன் லொத்தர் குலுக்கலில் சேர்க்கப்படுவர். இதில் வெற்றி பெறுபவரிற்கு ஒரு மில்லியன் யூரோ பரிசாக வழங்கப்படும்.

குறித்த நபரிற்கு 2016 நவம்பரில் லொத்தர் விழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த லொத்தரை தொடர்ச்சியாக வாங்கி வந்துள்ளார். இந்நிலையிலேயே, கடந்த மே 18 ம் திகதி இவருக்கு மீண்டும் லொத்தர் விழுந்துள்ளது.

இது தொடர்பாக அவர், மொத்த ஜாக்பாட் பரிசான 100மில்லியன் யூரோவை குறிவைத்துத்தான் லொத்தரை தொடர்ந்து வாங்கிவருகிறேன். ஒற்றைப்படை எண் தான் எனக்கு ராசியாக கருதுகிறேன். அதன்படியே லொத்தர் எண்களை தேர்வு செய்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், அவுஸ்திரேலியாவில் இதேபோன்று 40 வயதான ஒருவருக்கு ஒரேவாரத்தில் இரு முறை லொத்தரில் அதிர்ஷ்டப்பரிசு கிடைத்தது. அவர் வென்ற மொத்த பரிசுத்தொகை ரூ.10கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**