ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு போக்குவரத்து துண்டிப்பு

0
712
Diyagala traffic completely blocked landslide Colombo main road

(Diyagala traffic completely blocked landslide Colombo main road)

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் இன்று (07) மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீரற்ற காலநிலையினால் நேற்று (06) மாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினையடுத்தே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் கண்டி பிரதான வீதிகளுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பாதை சீர் செய்யும் பணியில் வீதி போக்குவரத்து அதிகார சபை ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, மாற்று வழிகளான கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வரும் வாகனங்கள் கலுகல வீதியினை பயன்படுத்துமாறும், ஹட்டனிலிருந்து செல்லும் வாகனங்கள் தியகல – நோர்ட்டன் வீதியினை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த மாற்று வழிகளை பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலையும், வீணான கால தாமதத்தினையும் தவிர்த்துக் கொள்ளலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

தொடர்ந்தும் மலையக பகுதிக்கு மழை பெய்து வருவதனால் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(Diyagala traffic completely blocked landslide Colombo main road)