அறியாத பருவத்தில் யுவதி செய்து வந்த செயல்!

0
721

அவுஸ்திரேயாவில் தனது காதலனோடு சேர்ந்து போதைப்பொருள் விற்றுவந்த யுவதியொருவருக்கு 3 ஆண்டுகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  Australia Ice Selling girl

குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஏஞ்சலிகா ரோஸ் லொக்வுட் என்ற குறித்த யுவதியின் வழக்கு பிரிஸ்பேனில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த யுவதியின் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலும் ஒன்றாகும்.

தற்போது 18 வயதான அவர், குற்றத்தை புரியும்போது 17 வயதாகும். எனவே அவருக்கு 3 வருட ஒத்திவைக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், உடனடியாக பரோலில் விடுதலை செய்யப்பட்டுமுள்ளார்.

குறித்த யுவதி நடுவில் முகவராக மட்டுமே செயற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.