பேப்பர் மூலம் காப்பாற்றப்பட்ட பெண்ணின் உயிர்!

0
519
woman life saved throughh paper

குடியிருப்பு ஒன்றில் இருந்த பெண் ஒருவர், அவசரமாக காவல்துறையினரை அழைக்குமாறு பேப்பர் ஒன்றில் எழுதி ஜன்னலால் வெளியே எறிந்துள்ளார். இதனை பார்த்த வீதியில் சென்ற பாதசாரி ஒருவரால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. woman life saved throughh paper

Franconville நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 34 வயதான பெண் ஒருவர், ‘SOS Appelez la police, 8e porte gauche!’ (அவசரமாக காவல்துறையினரை அழைக்கவும். 8ம் இலக்க கதவு!’) என பேப்பர் ஒன்றில் எழுதி ஜன்னலால் வெளியே வீசியுள்ளார்.

அதனை கண்டெடுத்த வீதியில் சென்ற நபர் ஒருவர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கண்காணிப்பு காவல்துறையினர் குறித்த பெண்ணின் வீட்டினை கண்டுபிடித்துள்ளனர்.

அப்பெண்ணின் வீட்டுக்கு முன்பாக 49 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து அந்த நபர், குறித்த பெண்ணின் கணவர் எனவும், தினமும் குடித்துவிட்டு வந்து அப்பெண்ணை தாக்கியுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், பெண்ணின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**