இன்றைய ராசி பலன் 06-06-2018

0
641
Today Horoscope 06-06-2018

இன்று!

விளம்பி வருடம், வைகாசி மாதம் 23ம் தேதி, ரம்ஜான் 21ம் தேதி,
6.6.18 புதன்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 8:12 வரை;
அதன் பின் அஷ்டமி திதி, சதயம் நட்சத்திரம் மாலை 5:28 வரை;
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today Horoscope 06-06-2018 )

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்
பொது : தேய்பிறை அஷ்டமி விரதம், பைரவர் வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
பெருந்தன்மை மிக்கவராக விளங்குவீர்கள். நற்செயலில் ஈடுபட்டு சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

ரிஷப ராசி நேயர்களே !
மாறுபட்ட சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழி வகுக்கும்.

மிதுனம் ராசி நேயர்களே !
இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். அன்றாட வாழ்வில் புத்துணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் விதத்தில் இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். மனைவி விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்

கடக ராசி நேயர்களே !
செயலில் திறமை வெளிப்படும். அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தருவதாக மாறும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே !
புதிய முயற்சி முழு அளவில் வெற்றியளிக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் கூடும். குடும்பத் தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.

கன்னி ராசி நேயர்களே !
முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமத்தை உடனடியாக சரி செய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் எதிர்கால படிப்பு குறித்து ஆலோசிப்பர்.

துலாம் ராசி நேயர்களே !
மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்காக கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்தியளிக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
சிலர் சுயநலத்துடன் உங்களிடம் பழகலாம். விழிப்புடன் விலகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். திடீர் பயணம் செல்ல நேரிடலாம். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

தனுசு ராசி நேயர்களே !
மாறுபட்ட கருத்து கொண்டவரை சந்திக்க நேரிடலாம். பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் கடைபிடிக்கவும்.

மகர ராசி நேயர்களே !
செயல் நிறைவேற தாமதம் ஆகலாம். சிறிய பணி கூட சுமையாக இருக்கலாம். தொழில், வியாபாரம் சிறக்க விடாமுயற்சி அவசியம். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

கும்பம் ராசி நேயர்களே !
பெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. பணியில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.

மீனம் ராசி நேயர்களே !
செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today Horoscope 06-06-2018