செந்தனியில் அம்புலன்ஸ் மீது தாக்குதல்!

0
557
SAMU service doctor & driver attacked France

செந்தனியில் நேற்று SAMU அவசர உதவி மருத்துவ சேவையின் மருத்துவர் ஒருவரும், அவரின் உதவியாளர்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். SAMU service doctor & driver attacked France

நேற்று செவ்வாய்க்கிழமை, 93 ஆம் இலக்க வட்டார SAMU சேவைகளின் மருத்துவர், நோயாளர்காவு வண்டியில் புறப்படத் தயாராகி கொண்டிருந்தபோது, அதிவேகமாக அவர்களை உரசிக்கொண்டு கார் ஒன்று வந்து நின்றுள்ளது.

இந்நிலையில், நோயாளர் காவு வண்டியின் சாரதியிடம் யார் இவர்கள், ஏன் இப்படி காரை செலுத்துகிறார்கள் என மருத்துவர் கேட்டுள்ளார். அப்போது எதிரே வந்த காரிலிருந்து சுத்தியல் போன்ற ஆயுதங்களுடன் இருவர் கீழே இறங்கியுள்ளனர்.

அவர்கள் மருத்துவரையும் அவரின் உதவியாளர்களையும், சாரதியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த BAC அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை குறித்த இரு தாக்குதலாளிகளும் BAC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**