ஈரானின் கையில் அணு ஆயுதங்கள் சிக்குவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது – பெஞ்சமின் நேதன்யாகு

0
554
Israel never allow nuclear weapons Iran hands Benjamin Netanyahu

Israel never allow nuclear weapons Iran hands Benjamin Netanyahu

யூரேனியம் செறிவூட்டும் நிலையத்தை மீண்டும் செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக ஈரான் அரசு சர்வதேச அணு சக்தி முகமையிடம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு எதிராக முதல் நாடாக இஸ்ரேல் குரல் எழுப்பியுள்ளது. தற்போது, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அணு ஆயுதம் தயாரிக்க தயாராகும் ஈரானின் முடிவில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து பெஞ்சமின் நேதன்யாகு அளித்த வீடியோ பேட்டியில், ‘ஈரான் நாட்டின் தலைவர் அயாத்துல்லா கமேனி இருநாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியின்போது இஸ்ரேலை அழிக்கப்போவதாக தெரிவித்திருந்தார். வரிசையாக அணு குண்டுகளை தயாரிக்கும் விதத்தில் அளவுக்கதிகமான யூரேனியத்தை செறிவூட்டுவதன் மூலம் இதை செய்து முடிக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

எனவே, அணு ஆயுதங்கள் தயாரிக்க தேவையான யூரேனியத்தை செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் அரசின் முடிவில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. எனினும், ஈரானின் கையில் அணு ஆயுதங்கள் சிக்குவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Israel never allow nuclear weapons Iran hands Benjamin Netanyahu