லைட்கள் தொடர்பில் உஷார் அவுஸ்திரேலியர்களே!

0
510
fog Light Fine

 

நாம் வாகனம் ஓட்டும்போது வீதி விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவோம். ஆனால் வாகனத்திலுள்ள சில lights-விளக்குகளை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Fog Light Fine

ஆம். கார்களின் முன்புறமும் பின்புறமுமுள்ள fog light-களை மூடுபனி மற்றும் மழையான காலநிலையில் வாகன ஓட்டியால் சரியாக பார்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் சாதாரண சூழ்நிலைகளில் fog lights-ஐப் பயன்படுத்தினாலோ அல்லது உங்கள் fog light-களை அணைக்க மறந்தாலோ நீங்கள் கீழ்க்காணும் தொகையை அபராதமாக செலுத்த நேரிடும்.

நியூ சவுத் வேல்ஸ்- 110 டொலர்கள்- 2 demerit points

விக்டோரியா- 159 டொலர்கள்

மேற்கு ஆஸ்திரேலியா- 100 டொலர்கள் 1 demerit point

குயின்ஸ்லாந்து- 50 டொலர்கள் 1 demerit point

தெற்கு ஆஸ்திரேலியா- 233 டொலர்கள்

டஸ்மேனியா- 119 டொலர்கள்

Fog light-களை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தும் போது, அவை முன்புறம் மற்றும் பின்புறம் வரும் ஏனைய வாகன ஓட்டுநர்களின் பார்வையைப் பாதித்து விபத்துகளை ஏற்படுத்தக்கூடுமென்பதால் இச்சட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமுலில் உள்ளது.